-
2 ராஜாக்கள் 24:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 எருசலேமில் இருந்த உயர் அதிகாரிகள்,+ மாவீரர்கள், கைத்தொழிலாளிகள், கொல்லர்கள்*+ என எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனான்; மொத்தம் 10,000 பேரைக் கொண்டுபோனான். பரம ஏழைகளைத் தவிர வேறு யாரையுமே நகரத்தில் விட்டுவைக்கவில்லை.+ 15 இப்படி, யோயாக்கீனையும்+ அவருடைய அம்மாவையும் மனைவிகளையும் அரண்மனை அதிகாரிகளையும் பிரபலமான ஆண்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+
-
-
எரேமியா 24:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின்+ மகன் எகொனியாவையும்,*+ யூதாவின் அதிகாரிகளையும், கைத்தொழிலாளிகளையும், கொல்லர்களையும்* எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு+ போன பின்பு யெகோவா எனக்கு ஒரு காட்சியைக் காட்டினார். இரண்டு அத்திப் பழக் கூடைகள் யெகோவாவின் ஆலயத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தன.
-
-
தானியேல் 1:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 உண்மைக் கடவுளான யெகோவா, யூதாவின் ராஜா யோயாக்கீமை நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுத்துவிட்டார்.+ அதோடு, ஆலயத்திலிருந்த பாத்திரங்கள் சிலவற்றை அவன் எடுத்துக்கொண்டு போவதற்கும் விட்டுவிட்டார். அவன் அந்தப் பாத்திரங்களை சினேயார்*+ தேசத்திலிருந்த தன் தெய்வத்தின் கோயிலுக்கு எடுத்துக்கொண்டு போய், அதன் பொக்கிஷ அறையில் வைத்தான்.+
3 பின்பு இஸ்ரவேல் ஜனங்களிலும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலும், உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலும் சிலரைக் கொண்டுவரும்படி+ அரண்மனையின் முக்கிய அதிகாரியான அஸ்பேனாசுக்கு ராஜா உத்தரவு போட்டான்.
-