உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 14:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்.+ அவன் அவர்களைத் துரத்திக்கொண்டு வருவான். பார்வோனையும் அவனுடைய எல்லா படைகளையும் தோற்கடிப்பதன் மூலம் எனக்குப் புகழ் சேர்ப்பேன்.+ அப்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்றார். அவர் சொன்னபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.

  • 2 ராஜாக்கள் 19:17-19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 யெகோவாவே, அசீரிய ராஜாக்கள் மற்ற தேசங்களையும் அங்கிருந்த நகரங்களையும் அழித்துப்போட்டது உண்மைதான்.+ 18 அங்கிருந்த மக்கள் வணங்கிய தெய்வங்களையும் நெருப்பில் எரித்துப்போட்டார்கள். அவையெல்லாம் கடவுள் கிடையாதே,+ மனுஷர்கள் செய்தவைதானே,+ வெறும் மரக்கட்டையும் கல்லும்தானே. அதனால்தான் அவர்களால் அவற்றை அழிக்க முடிந்தது. 19 ஆனால் யெகோவாவே, எங்கள் கடவுளே, நீங்கள் மட்டும்தான் கடவுள் என்பதைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.+ அதனால் யெகோவாவே, எதிரியின் கையிலிருந்து தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார்.

  • சங்கீதம் 83:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அவர்கள் என்றென்றும் அவமானப்பட்டு, கதிகலங்கிப்போகட்டும்.

      கேவலப்பட்டு, அழிந்துபோகட்டும்.

      18 யெகோவா என்ற பெயருள்ள+ நீங்கள் ஒருவர்தான்,

      இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான* கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.+

  • எசேக்கியேல் 39:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 எல்லா ஜனங்களுக்கும் என்னுடைய மகிமையைக் காட்டுவேன். நான் எப்படித் தண்டனை கொடுத்தேன் என்றும், என் வல்லமையை எப்படிக் காட்டினேன் என்றும் எல்லா ஜனங்களும் பார்ப்பார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்