உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 7:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஆனால், பார்வோன் உங்களுடைய பேச்சைக் கேட்க மாட்டான். அதனால் எகிப்துக்கு எதிராக என்னுடைய பலத்தைக் காட்டுவேன். எகிப்தைப் பயங்கரமாகத் தண்டித்து, பெரிய படைபோல் இருக்கிற என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன்.+

  • யாத்திராகமம் 14:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்.+ அவன் அவர்களைத் துரத்திக்கொண்டு வருவான். பார்வோனையும் அவனுடைய எல்லா படைகளையும் தோற்கடிப்பதன் மூலம் எனக்குப் புகழ் சேர்ப்பேன்.+ அப்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்றார். அவர் சொன்னபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.

  • ஏசாயா 37:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆனால் யெகோவாவே, எங்கள் கடவுளே, நீங்கள் மட்டும்தான் கடவுள்+ என்பதைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் யெகோவாவே, எதிரியின் கையிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார்.

  • எசேக்கியேல் 38:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 தேசத்தை மூடுகிற மேகம் போல நீ என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கு எதிராக வருவாய். கடைசி நாட்களில் நான் உன்னை என்னுடைய தேசத்துக்கு எதிராக வர வைப்பேன்.+ கோகுவே, மற்ற ஜனங்களுக்குமுன் நான் பரிசுத்தமானவர் என்று உன் மூலமாகக் காட்டுவேன். அப்போது, நான் யார் என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”’+

  • மல்கியா 1:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 “சூரியன் உதிக்கும் திசையிலிருந்து அது மறையும் திசைவரைக்கும் உள்ள எல்லா தேசங்களிலும் என் பெயர் புகழ் பெற்றிருக்கும்.+ எல்லா இடங்களிலும் எனக்குத் தகன பலிகள் செலுத்தப்படும். என் பெயரில் பரிசுத்தமான காணிக்கைகள் அர்ப்பணிக்கப்படும். ஏனென்றால், எல்லா தேசங்களிலும் என் பெயர் புகழ் பெற்றிருக்கும்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்