உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 2:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவனைப் பார்த்து இளம் சிங்கங்கள் கர்ஜித்தன.+

      சத்தமாக உறுமின.

      அவனுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தன.

      அவனுடைய நகரங்கள் கொளுத்தப்பட்டன; அங்கு யாருமே இல்லை.

  • எரேமியா 32:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 இந்த நகரத்துக்கு எதிராகப் போர் செய்கிற கல்தேயர்கள் உள்ளே வந்து முழு நகரத்தையும் கொளுத்திவிடுவார்கள். இங்கே இருக்கிற எல்லா வீடுகளும் சாம்பலாகும்.+ ஏனென்றால், அவற்றின் மொட்டைமாடிகளில்தான் ஜனங்கள் பாகாலுக்குப் பலிகளையும், மற்ற தெய்வங்களுக்குத் திராட்சமது காணிக்கையையும் செலுத்தி என் கோபத்தைக் கிளறினார்கள்.’+

  • எசேக்கியேல் 16:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 உன்னை அவர்களுடைய கையில் கொடுப்பேன். அவர்கள் உன்னுடைய பலிபீடங்களை உடைப்பார்கள், உன்னுடைய ஆராதனை மேடுகளை இடித்துத் தள்ளுவார்கள்.+ உன்னுடைய உடைகளை உருவி,+ உன்னுடைய அழகான நகைகளைப் பிடுங்கி,+ உன்னை நிர்வாணமாக விட்டுவிடுவார்கள்.

  • மீகா 3:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அதனால், வயலைப் போல சீயோன் உழப்படும்.

      எருசலேம் மண்மேடாகும்.+

      ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்.+

      உங்களால்தான் இந்த நிலைமை வரும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்