-
2 ராஜாக்கள் 23:31-34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 யோவாகாஸ்+ ராஜாவானபோது அவருக்கு 23 வயது; அவர் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அமுத்தாள்;+ அவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் மகள். 32 யோவாகாஸ் தன்னுடைய முன்னோர்களைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்.+ 33 காமாத் பகுதியிலிருந்த ரிப்லாவில் பார்வோன் நேகோ+ அவரைச் சிறையில் அடைத்தான்;+ எருசலேமில் அவருடைய ஆட்சிக்கு முடிவுகட்டினான். பின்பு, 100 தாலந்து* வெள்ளியையும் ஒரு தாலந்து தங்கத்தையும் தரச்சொல்லி, அவருடைய தேசத்துக்கு அபராதம் விதித்தான்.+ 34 அதோடு, யோசியாவின் இடத்தில் அவருடைய மகன் எலியாக்கீமை ராஜாவாக நியமித்தான்; எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால், யோவாகாசை எகிப்துக்குக் கொண்டுபோனான்;+ கடைசியில், யோவாகாஸ் அங்கே இறந்துபோனார்.+
-