-
எரேமியா 43:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 பின்பு அவர்களிடம் இப்படிச் சொல்: ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “என் ஊழியனும் பாபிலோனின் ராஜாவுமான நேபுகாத்நேச்சாரை நான் வர வைப்பேன்.+ நான் மறைத்து வைத்திருக்கிற இந்தக் கற்களுக்கு மேல் அவனுடைய சிம்மாசனத்தை நிறுத்துவேன். அவன் தன்னுடைய ராஜ கூடாரத்தை அவற்றின் மேல் விரிப்பான்.+ 11 அவன் வந்து எகிப்து தேசத்தைத் தாக்குவான்.+ உங்களில் சிலர் கொள்ளைநோயினால் சாவீர்கள். சிலர் சிறைபிடிக்கப்பட்டுப் போவீர்கள். சிலர் வாளால் வெட்டிக் கொல்லப்படுவீர்கள்.+
-
-
எரேமியா 46:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘இப்போது நான் நோ*+ நகரத்திலுள்ள ஆமோனையும்,+ எகிப்தையும், அவளுடைய தெய்வங்களையும்,+ அவளுடைய ராஜாக்களையும் அழிப்பேன். பார்வோனையும் அவனை நம்புகிற எல்லாரையும் தண்டிப்பேன்.’+
26 யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்களைக் கொல்லத் துடிக்கிற பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரிடமும்+ அவனுடைய ஊழியர்களிடமும் நான் அவர்களைக் கொடுப்பேன். ஆனால், அதற்குப் பிறகு எகிப்திலே பழையபடி ஜனங்கள் குடியிருப்பார்கள்.+
-