-
உபாகமம் 28:63, 64பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
63 உங்களை ஏராளமாகப் பெருக வைப்பதிலும் சீரும் சிறப்புமாக வாழ வைப்பதிலும் ஒருசமயம் சந்தோஷப்பட்ட யெகோவா, இப்போது உங்களை அழிப்பதிலும் ஒழிப்பதிலும் சந்தோஷப்படுவார். நீங்கள் சொந்தமாக்கப்போகும் தேசத்திலிருந்து யெகோவா உங்களை வேரோடு பிடுங்கி எறிவார்.
64 பூமியின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை இருக்கிற எல்லா தேசங்களிலும் யெகோவா உங்களைச் சிதறிப்போக வைப்பார்.+ அங்கே மரத்தாலும் கல்லாலும் செய்யப்பட்ட பொய் தெய்வங்களைக் கும்பிடுவீர்கள்; உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்கள் அவை.+
-
-
யோசுவா 23:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகள் எல்லாவற்றையும் யெகோவா நிறைவேற்றியது போலவே+ சாபங்கள் எல்லாவற்றையும் நிச்சயம் நிறைவேற்றுவார். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழித்துவிடுவார்.+ 16 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த ஒப்பந்தத்தை மீறி மற்ற தெய்வங்களைக் கும்பிட்டால், யெகோவாவுக்கு உங்கள்மேல் பயங்கர கோபம் வரும்.+ அவர் தந்திருக்கிற இந்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாக அழிந்துபோவீர்கள்”+ என்று சொன்னார்.
-
-
1 ராஜாக்கள் 9:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 நீயோ உன்னுடைய வாரிசுகளோ என் வழியைவிட்டு விலகி, என் கட்டளைகளுக்கும் என் சட்டதிட்டங்களுக்கும் கீழ்ப்படியாமல் போனால், மற்ற தெய்வங்களை வழிபட்டு அவற்றின் முன்னால் தலைவணங்கினால்,+ 7 நான் கொடுத்த இந்தத் தேசத்திலிருந்து இஸ்ரவேலர்களை அடியோடு அழிப்பேன்.+ என்னுடைய பெயருக்காக நான் புனிதப்படுத்திய இந்த ஆலயத்தை என் கண் முன்னாலிருந்து ஒதுக்கித்தள்ளிவிடுவேன்.+ அப்போது, மற்ற தேசத்து மக்கள் எல்லாரும் இஸ்ரவேல் மக்களை ஏளனமாகப் பேசுவார்கள், கேலியும் கிண்டலும் செய்வார்கள்.+
-