உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 8:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 உடனே அசகேல், “எஜமானே, ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “இஸ்ரவேல் மக்களுக்கு நீ செய்யப்போகும் கொடுமைகளை+ நினைத்துதான் அழுகிறேன். அவர்களுடைய கோட்டைகளைத் தீ வைத்துக் கொளுத்துவாய், பலசாலிகளை வாளால் வெட்டுவாய், பிள்ளைகளைக் கொடூரமாக அடித்துக் கொன்றுபோடுவாய், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழிப்பாய்”+ என்று சொன்னார்.

  • 2 ராஜாக்கள் 10:32, 33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அந்தக் காலத்தில், மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரவேல் தேசத்தைக் கைப்பற்றுவதற்கு யெகோவா விட்டுவிட்டார். இஸ்ரவேலின் எல்லா பிரதேசங்களிலும் அசகேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தான்.+ 33 யோர்தானுக்குக் கிழக்கே இருந்த கீலேயாத் பிரதேசம் முழுவதையும், அதாவது காத், ரூபன், மனாசே கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள்+ குடியிருந்த பிரதேசம் முழுவதையும், தாக்கிவந்தான். அர்னோன் பள்ளத்தாக்கு* பக்கத்தில் இருந்த ஆரோவேர் தொடங்கி கீலேயாத், பாசான்+ பிரதேசங்களும் இதில் அடங்கியிருந்தன.

  • 2 ராஜாக்கள் 13:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 கடைசியில், யோவாகாசிடம் வெறும் 50 குதிரைவீரர்களும் 10,000 காலாட்படை வீரர்களும்தான் இருந்தார்கள்; வெறும் 10 ரதங்கள்தான் இருந்தன. ஏனென்றால், அவருடைய மற்ற ரதங்களையும் வீரர்களையும் சீரியாவின் ராஜா அழித்துவிட்டான்,+ களத்துமேட்டிலிருக்கிற பதரைப் போல் மிதித்துப்போட்டான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்