-
1 ராஜாக்கள் 22:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அதனால், இஸ்ரவேலின் ராஜா தீர்க்கதரிசிகளை வரவழைத்தார். சுமார் 400 பேர் கூடிவந்தார்கள். அவர்களிடம், “நான் ராமோத்-கீலேயாத்தின் மீது படையெடுத்துப் போகலாமா, வேண்டாமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “போங்கள், யெகோவா அதை உங்கள் கையில் கொடுப்பார்” என்று சொன்னார்கள்.
-
-
1 ராஜாக்கள் 22:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அதற்கு இஸ்ரவேலின் ராஜா, “இன்னும் ஒருவன் இருக்கிறான். அவன் மூலமாகவும் யெகோவாவிடம் விசாரிக்கலாம்.+ ஆனால், அவனை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது.+ ஏனென்றால், இதுவரை அவன் என்னைப் பற்றி நல்ல விஷயத்தைத் தீர்க்கதரிசனமாகச் சொன்னதே கிடையாது, கெட்ட விஷயத்தைத்தான் சொல்வான்.+ அவன் பெயர் மிகாயா, இம்லாவின் மகன்” என்றார். அதற்கு யோசபாத், “ராஜாவே, நீங்கள் இப்படியெல்லாம் பேசக் கூடாது” என்று சொன்னார்.
-
-
ஏசாயா 9:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 அவர்கள் ஜனங்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.
மக்களும் குழப்பத்தில் தவிக்கிறார்கள்.
-
-
எசேக்கியேல் 13:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “மனிதகுமாரனே, இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.+ சொந்தமாகக் கற்பனை செய்து தீர்க்கதரிசனங்கள் சொல்கிறவர்களிடம்+ இப்படிச் சொல்: ‘யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். 3 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “எந்தத் தரிசனத்தையும் பார்க்காமல் சொந்தமாகக் கதை கட்டுகிற முட்டாள் தீர்க்கதரிசிகளுக்குக் கேடுதான் வரும்.+
-