உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவேல் 2:28-32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அதற்குப் பின்பு, பலதரப்பட்ட ஜனங்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன்.+

      உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.

      உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.

      உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள்.+

      29 அந்த நாட்களில், எனக்கு ஊழியம் செய்கிற ஆண்கள்மேலும் பெண்கள்மேலும்

      என் சக்தியைப் பொழிவேன்.

      30 வானத்திலும் பூமியிலும் அதிசயங்களைச் செய்து காட்டுவேன்.

      எங்கு பார்த்தாலும் இரத்தமாகவும், நெருப்பாகவும், புகைக் காடாகவும் இருக்கும்.+

      31 யெகோவாவின் படுபயங்கரமான மகா நாள்+ வருவதற்குமுன்

      சூரியன் இருண்டுவிடும், சந்திரன் இரத்த நிறமாகிவிடும்.+

      32 யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.+

      அவர்கள் யெகோவா சொன்னபடியே சீயோன் மலையிலும் எருசலேமிலும் இருப்பார்கள்.+

      அவர்கள் யெகோவாவினால் அழைக்கப்பட்டவர்கள்.”

  • ரோமர் 10:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதனால், “யெகோவாவின்* பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்