உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 12/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 12/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

தோழமை எனக்கு 16 வயதாகிறது, ஆன்டி லூயியைப் பற்றிய, “என் அன்புத் தோழி” (பிப்ரவரி 22, 1996) என்று தலைப்பிடப்பட்ட கட்டுரைக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அந்த ஃபோட்டோ என்னைக் கவர்ந்தது, நான் உடனடியாக அந்தக் கட்டுரையைப் படித்தேன். நான் கொஞ்சம் வெறுத்துப்போயிருந்தேன், ஏனென்றால் என் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையிலேயே எனக்கு நண்பர்களாக இருக்கவில்லை. என்னைவிட வயதில் பெரிதானவர்களோடு தோழமைகொள்வதை நாடும்படி அந்தக் கட்டுரை உண்மையிலேயே என்னை உற்சாகப்படுத்தியது.

எல். என்., இத்தாலி

பள்ளி விளையாட்டுகள் “இளைஞர் கேட்கின்றனர் . . . அணி விளையாட்டுகள்—எனக்கு அவை நல்லவையா?” (பிப்ரவரி 22, 1996) என்ற கட்டுரைக்காக நன்றி. அது எனக்கே எழுதினதுபோல் இருந்தது. இதுநாள்வரை நான் ஒருவேளை விளையாட்டு வீரர்களை வணங்கிவந்திருக்கிறேன் என அது என்னை உணரச்செய்தது. மேலும் “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது” என்பதை நான் புரிந்துகொள்ள எனக்கு அந்தக் கட்டுரை உதவியது.—1 தீமோத்தேயு 4:8.

ஒய். டி., ஜப்பான்

நாகப்பாம்பு நாகப்பாம்புகள் அழிக்கப்படவேண்டிய பொல்லாத ஊரும் பிராணிகள் என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், “நாகப்பாம்பை நீங்கள் சந்திக்க விரும்புவீர்களா?” (மார்ச் 22, 1996) என்ற கட்டுரையை படித்த பிறகு, இப்போது நான் அவற்றை வேறு விதமாக கருதுகிறேன். ஆர்வத்தைத் தூண்டும் இப்படிப்பட்ட பிராணிகளைப் பற்றிய தப்பெண்ணங்களிலிருந்து என்னைப் போன்ற மக்களை விடுவித்ததற்காக நான் நன்றி சொல்கிறேன்.

பி. ஈ., நைஜீரியா

அநேக பாம்புகளுள்ள கிராமப்பகுதியில் நான் வளர்க்கப்பட்டிருந்தாலும், உண்மையிலேயே அவற்றைப் பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை. நேருக்குநேர் எதிர்ப்படுவதைத் தவிர்ப்பதில் நாகப்பாம்புகள் வினாவுள்ளவை என்பதை நான் படித்தது, மத்தேயு 10:16-ல் இயேசு குறிப்பிட்ட வார்த்தைகளை இன்னுமதிகமாக புரிந்துகொள்ள எனக்கு உதவியது: ‘சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாய் இருங்கள்.’

ஜே. எஃப். எஸ்., ப்ரேஸில்

கள்ளத்தயாரிப்பு “கள்ளத்தயாரிப்பு—உலகெங்கிலுமுள்ள ஒரு பிரச்சினை” (மார்ச் 22, 1996) என்ற தொடருக்காக உங்களுக்கு நன்றி. நான் ஒரு பாங்க்கில் வேலை செய்கிறேன், மோசடி தடுத்தலின்பேரில் சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டேன். நீங்கள் அளித்த அந்தத் தகவல் மிகவும் லேட்டஸ்ட்டானது. நம்பத்தகுந்த, தகவலளிக்கும் அனைத்து கட்டுரைகளுக்காகவும் உங்களுக்கு நன்றி.

பி. பி., ஐக்கிய மாகாணங்கள்

நான் பாங்க்கில் ஒரு காஷியராக வேலை செய்வதன் காரணமாக, அந்தக் கட்டுரைகளை போற்றினேன். பரபரப்பை ஏற்படுத்துவதற்கென்றே தவறான தகவலை பிரசுரிக்கும் சில பத்திரிகைகளைப்போல் அல்லாமல், நீங்கள் மிகவும் சமநிலையான ஒரு கருத்தை பிரசுரித்தீர்கள். கடைக்காரர்களுக்கு எங்கள் பாங்க் இந்த ஆலோசனையை அளிக்கிறது: ‘ஒவ்வொரு ரூபாய்க்கும் புத்தம்புது நோட்டை எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். சந்தேகம் வரும்போது, சந்தேகமளிக்கும் நோட்டை (காகிதம், ப்ரின்ட், நீர்க்கோடு) நிஜ நோட்டோடு வைத்து ஒத்துப்பாருங்கள்.’

எல். ஜி., பிரான்ஸ்

சமநிலை “கடவுளின் பரிசாகிய சமநிலை” (மார்ச் 22, 1996) என்ற கட்டுரைக்காக நன்றி. மூன்று வருடங்களுக்கு முன்பு, எட்டு வாரங்களுக்கு தலைச்சுற்றலால் நான் அவதிப்பட்டேன். இதை நான் முன்பு கேள்விப்பட்டே இருந்திராததன் காரணமாக, எனக்கு மட்டும்தான் இந்த வியாதியிருப்பதாக முதலில் நான் நினைத்துக்கொண்டேன். மற்றவர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்ப்பட்டு அதை மேற்கொண்டிருக்கின்றனர் என்பதை எனக்குக் காட்டுவதன் மூலம் உங்கள் கட்டுரை எனக்கு ஆறுதலளித்தது.

டி. பி., ஜமைக்கா

ஈக்கள் “அந்த அருவருக்கத்தக்க ஈக்கள்—நீங்கள் நினைப்பதைவிட அதிக பயனுள்ளவையா?” (மார்ச் 22, 1996) என்ற மிகவும் ஆர்வமூட்டிய கட்டுரைக்காக நன்றி. சென்ற கோடைகாலத்தின்போது, ஈக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் நான் கொஞ்ச காலம் செலவிட்டேன், ஆனால் திருப்தியளிக்கும் எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. கட்டுரை சொல்லும் விதமாகவே, அவை தொந்தரவளிப்பவையாயும் சுகாதாரமற்றவையாயும் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் உபயோகமான ஒன்றையும் அவை செய்கின்றனவென்பதை இப்போது அறிந்துகொண்டேன்—இல்லையென்றால் நம் சிருஷ்டிகர் அவற்றை படைத்திருக்கவே மாட்டாரே. நீங்கள் பிரசுரிக்கும் கட்டுரைகளை நான் பெரிதும் போற்றுகிறேன்.

டி. ஜி., இத்தாலி

ஈக்களின்பேரிலான கட்டுரையை இப்போதுதான் நான் படித்துமுடித்தேன், என்னால் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை. இந்த தொந்தரவளிக்கும் உயிரினத்தை படைக்கும்போது யெகோவா மனதில் எதைக் கொண்டிருந்தார் என அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்பதாக அநேகம் முறை நான் மற்றவர்களிடம் கேலியாக சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்த ஈ வெறுமனே நமக்கு தொந்தரவளிப்பதற்காக பூமியில் படைக்கப்படவில்லை என்பதை நான் இப்போது அறிந்துகொண்டேன்!

பி. பி., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்