உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 12/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நடைப்பாங்குகள் இழப்புக்காக புலம்புதல்
  • செல்லுலார் ஃபோன் ஆபத்து
  • கன்னியாஸ்திரீகள் கராத்தே கற்கின்றனர்
  • சூரிய ஒளி நீரை சுத்திகரிக்கிறது
  • அழுத்தத்திற்குள்ளான சிறுவர்கள்
  • நெடுநாள் மிடுக்குடன் இருத்தல்
  • எருமை அம்மை இந்தியாவைத் தாக்குகிறது
  • மற்றொரு தவறான அறிகுறி
  • புதிய நீர்வழி
  • பை-யின் மதிப்பு
  • பிடிபடாவிட்டாலும் பயன்மிக்க எண்
    விழித்தெழு!—2000
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1988
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 12/8 பக். 28-29

உலகை கவனித்தல்

நடைப்பாங்குகள் இழப்புக்காக புலம்புதல்

‘கடுகடுப்பு, முரட்டுத்தனமான நடத்தை, ஒழுங்கற்ற அல்லது காட்டுத்தனமான உடை, அசிங்கமான வார்த்தைகளைப் பேசுதல், ஏமாற்றுதல், மிருகத்தனமான பலத்தைப் பயன்படுத்துதல் போன்றவை வாழ்க்கையை முன்குறிப்பிட முடியாததாய், அசௌகரியமானதாய், இன்பமற்றதாய் ஆக்கியிருக்கிறது’ என்று லண்டன் செய்தித்தாள் தி டைம்ஸ் அறிக்கை செய்கிறது. தனிப்பட்ட தோற்றத்தை வேண்டுமென்றே உதாசீனம் செய்வது சில நாடுகளில் முரட்டுத்தன நடத்தையின் பரவலான ஓர் அம்சமாய் இருக்கிறது. “தோல் ஜேக்கட்டுகள், கொரில்லா தலைப்பட்டைகள், குத்தப்பட்ட மூக்குகள், ஸ்டட்டுகள் பதித்த தோல் பூட்ஸ்கள், காட்டுத்தனமான விதத்தில் பச்சைக்குத்துதல் ஆகியவை போருக்கு அழைப்பவையாய் இருக்கின்றன” என்று ரெட்ங் யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்த அத்தேனா லியூஸீ கூறுகிறார். அப்படிப்பட்ட உடை அணிவது பிறரை அவமதிப்பதன் ஒரு தெளிவான அடையாளம் என்று லியூஸீ கூறுகிறார். ‘பண்புநயம், கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகியவற்றில் சரிவு ஏற்பட்டிருப்பதானது, குற்றச்செயலைவிட இன்னும் அதிகமாய் சமுதாயத்தைப் பயமுறுத்துகிறது’ என்று தி டைம்ஸ் கூறுகிறது. அப்படியானால் இதற்குப் பரிகாரம்தான் என்ன? நடைப்பாங்குகள் “குடும்ப ஏற்பாட்டுக்குள் உருப்படுத்தப்பட” வேண்டும். “பிள்ளைகளுக்கு அவை வெறுமனே விளக்கிச் சொல்லப்பட முடியாது, ஆனால் முன்மாதிரி வகிப்பதன் மூலம் கற்பிக்கப்பட வேண்டும்” என்று அச் செய்தித்தாள் கூறுகிறது.

செல்லுலார் ஃபோன் ஆபத்து

செலுலார் டெலிஃபோன்களிலிருந்து வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளில் தீவிர பிரச்சினைகள் ஏற்படுவதற்குக் காரணிகளாய் இருக்கலாம் என்று சமீபத்தில் ஜப்பானில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. “ஒரு பரிசோதனையில், 45 சென்டிமீட்டர் தூரத்தில் செலுலார் ஃபோன் பயன்படுத்தப்பட்டபோது, இதய நுரையீரல் பொறி நின்றுவிட்டது” என்று ஆஸாஹீ ஈவ்னிங் நியூஸ் கூறுகிறது. திரவத்தை ஏற்றும் பம்ப்புகளிலும் கேன்ஸரை எதிர்க்கும் மருந்துகளை வழங்கும் பம்ப்புகளிலும் உள்ள எச்சரிப்பு ஓசைகள், அந்தக் கருவியிலிருந்து 75 சென்டிமீட்டர் தூரத்துக்குள் ஒரு செலுலார் ஃபோன் பயன்படுத்தப்பட்டபோது ஒலித்துவிட்டதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எக்ஸ்-கதிர் இயந்திரங்களும் வழி அழுத்தமானிகளும்கூட பாதிக்கப்பட்டன. இக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, செலுலார் ஃபோன்களை அறுவை சிகிச்சை செய்யும் அறைகளுக்குள்ளும், தீவிர சிகிச்சைப் பகுதிகளுக்குள்ளும் எடுத்துச் செல்லக்கூடாது என்று தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைத் துறை சிபாரிசு செய்கிறது. ஒரு சுற்றாய்வின்படி, டோக்கியோவில் உள்ள சுமார் 25 மருத்துவ நிறுவனங்கள் செலுலார் ஃபோன்களைப் பயன்படுத்துவதை ஏற்கெனவே ஒழுங்குபடுத்திவருகின்றன. அவற்றுள் 12 நிறுவனங்கள் செலுலார் ஃபோன்களைப் பயன்படுத்துவதையே மொத்தமாக தடை செய்துவருகின்றன.

கன்னியாஸ்திரீகள் கராத்தே கற்கின்றனர்

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அச்சுறுத்தலை எதிர்ப்பட்டவர்களாக, தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த மாதவரத்தில் இருக்கும் செயின்ட் ஆன்ஸ் புரொவின்ஸியேட்டில் ஒரு தொகுதியைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் கராத்தே பயிற்சி பெற ஆரம்பித்துள்ளனர். ஒரு கராத்தே ஆசிரியராய் தன்னுடைய 24-க்கும் மேற்பட்ட ஆண்டுப் பணியில், பெண்களுக்குத் தான் அளித்துள்ள பயிற்சியில், மற்ற பெண்களைக் காட்டிலும் கன்னியாஸ்திரீகள் நன்கு பயிற்சி பெற்றிருப்பதாக அனைத்திந்திய ஈஷின்ரியூ கராத்தே அசோஸியேஷனின் தலைவர் ஷீஹன் ஹுஸெனீ சொல்கிறார். ‘அவர்களுக்குள் மறைந்துள்ள அல்லது வெளிப்படாத சக்தியும் கட்டுப்பாடும் காரணமாய் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்’ என்று அவர் சொல்கிறார். அந்தக் கன்னியாஸ்திரீகள் பயன்படுத்தும்படி கற்பிக்கப்பட்டுள்ள ஒரு கருவி ஸேன் கோ என்று அழைக்கப்படுகிறது. அது சிலுவை வடிவமானது. “இக் கருவியைப் பயன்படுத்தி, தன்னைத் தாக்கும் ஒருவரைக் கொல்லவும் முடியும்” என்று ஹுஸெனீ உறுதியுடன் கூறுகிறார்.

சூரிய ஒளி நீரை சுத்திகரிக்கிறது

“சாதாரண சூரிய ஒளி, நீரிலிருக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும் பாதரச சேர்மங்களை (compounds) முறிக்கிறது என்று கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்” என்பதாக டோரன்டோவின், தி குளோப் அண்ட் மெய்ல் அறிக்கை செய்கிறது. ஒரே ஒரு வாரம் மெத்தில்மெர்க்குரி கலக்கப்பட்ட ஏரி நீரை சூரிய ஒளி படும்படி செய்வது, மெத்தில்மெர்க்குரியின் அளவை, 40 முதல் 66 சதவீதம் குறைப்பதில் விளைவடைந்ததை மெனட்டோபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும் வினப்பெக்கைச் சேர்ந்த நன்னீர் நிறுவனமும் கண்டறிந்துள்ளன. “இந்தப் பரிசோதனையைச் செய்ததுவரை, ஏரி நீரில் உள்ள மெத்தில்மெர்க்குரியை நுண்ணுயிரிகள் மட்டுமே முறித்தன என்பதாக விஞ்ஞானிகள் நம்பிவந்தனர்” என்று குளோப் கூறுகிறது. சூரிய ஒளி “முன்பு நுண்ணுயிரியால் செய்யப்பட்டு வந்த வேலைகளாக அறியப்பட்டிருந்ததைவிட 350 மடங்கு வேகமாய் வேலைசெய்வதாய்” தோன்றுவதாக அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

அழுத்தத்திற்குள்ளான சிறுவர்கள்

புண்கள் மற்றும் இரைப்பை அழற்சியுடைய சிறுவர்களின் எண்ணிக்கை பத்தாண்டுகளில் இரு மடங்காகியிருக்கின்றன, என்பதாக பிரேஸிலின் செய்தித்தாள் ஓ எஸ்டாடோ ட ஸௌ பௌலூ அறிக்கை செய்கிறது. சாவோ பாலோ பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் அடிப்படையிலான இக் கண்டுபிடிப்புகள், முக்கியக் காரணிகளில் ஒன்றாக உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. “அக் குழந்தையின் உணர்ச்சிப்பூர்வ உருவமைப்பில் நோயை ஏற்படுத்தும் அளவுக்கு . . . சமூக அழுத்தங்கள் பிரதிபலிக்கப்படுகின்றன” என்று இரைப்பைக் குடலியல் நிபுணர் சோரீனா பார்பியேரீ கூறுகிறார். குடும்பச் சண்டைகள், குடும்பத்தில் எவருக்காவது ஏற்பட்ட விபத்துகள் அல்லது இறப்புகள், பூரணத்துவக் கொள்கை, சமநிலையற்ற உணவு, போட்டி போடும் மனப்பான்மை, ஓய்வு நேரக் குறைவு ஆகியவை உட்பட, பிள்ளைப் பருவ அழுத்தத்தை உண்டுபண்ணும் பல காரணிகளை அந்தச் செய்தித்தாள் பட்டியலிட்டுக்கொண்டே சென்றது.

நெடுநாள் மிடுக்குடன் இருத்தல்

உங்களுடைய வயோதிகப் பிராயத்திலும் மனத்திறனைக் காக்க விரும்புகிறீர்களா? “உங்கள் படிப்பை உதாசீனம் செய்யாதீர்கள். உடல்ரீதியில் சுறுசுறுப்பாய் உங்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நுரையீரல்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்பதாக அமெரிக்கன் ஹெல்த் பத்திரிகை குறிப்பிடுகிறது. “மனத்திறனைக் காத்துக்கொள்ளும் சாத்தியத்தை அதிகரிக்க நம்மால் செய்யமுடியும் காரியங்கள் இருக்கவே இருக்கின்றன” என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த நரம்பு உளவியல் நிபுணர் மெரலின் ஆல்பர்ட் உறுதியுடன் கூறுகிறார். வயது அதிகரிக்கையில், மனத்திறமைகள் குறைவதிலிருந்து காப்பாற்ற, ஏதோ ஒரு வகையில் கல்வி “மூளை அமைப்பை மாற்றியமைக்கிறது” என்று டாக்டர் ஆல்பர்ட் யோசிக்கிறார். கூடுதலாக, உடல்ரீதியிலான நடவடிக்கை மூளைக்குச் செலுத்தப்படும் இரத்த ஓட்டத்தை முன்னேற்றுவிக்கலாம், மேலும் அதற்கு அதிகளவு ஆக்ஸிஜனை அளிக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆகவே ஆல்பர்ட் இவ்வாறு ஆலோசனை கூறுகிறார்: “தினமும் உலாவச் செல்லுங்கள், ஒரு மாதத்திற்கு ஒரு தடவை ஒரு புதிய புத்தகத்தையாவது வாசியுங்கள், நீங்கள் புகைப்பவராய் இருந்தால், அதை நிறுத்துவதன் மூலம் உங்கள் நுரையீரலுக்கு (மற்றும் மூளைக்கு) கரிசனை காட்டுங்கள்.”

எருமை அம்மை இந்தியாவைத் தாக்குகிறது

‘பெரியம்மையைத் தாக்கும் வைரஸின் அதே தொகுதியைச் சேர்ந்த ஒரு வைரஸால்’ உண்டுபண்ணப்படும் எருமை அம்மை, இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள பீட் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை செய்கிறது. இந்த அம்மை பெரியம்மையைவிட தீவிரம் குறைந்ததாய் இருந்தாலும் அது பரவிவருவதைக் குறித்து விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கவே செய்கின்றனர். “இந்த வைரஸ் மிகவும் கவனத்துடன் கவனிக்கப்பட வேண்டும்” என்று நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியின் நடத்துநரான டாக்டர் கல்யாண் பானர்ஜீ கூறுகிறார். “அது எந்தளவுக்குத் தீவிரமானது என்று எங்களால் சொல்ல முடியாது.” இந்த அம்மை, மருத்துவ வசதிகள் குறைவாய் இருக்கும் வெகுதொலைவிலுள்ள நாட்டுப்புறப் பகுதிகளுக்குப் பரவும் சாத்தியத்தைப் பற்றியதுதான் மிகவும் கவலைக்குரியதாய் இருக்கிறது. மனிதருக்கு வரும் எருமை அம்மை நோயால் கடும் காய்ச்சல், நிணநீர் முடிச்சுக்களில் வீக்கம், உடலில் ஏராளமான அம்மைத் தழும்புகள், பொது பலவீனம் ஆகியவை ஏற்படுகின்றன.

மற்றொரு தவறான அறிகுறி

“நில உலகுக்குப் புறம்பானவர்களுக்கான (Extraterrestrials) தேடுதல், கடந்த ஆண்டு பெரிதளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளது” என்பதாக நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. கலிபோர்னியாவிலுள்ள மலைக் காட்சியில் அஸ்திவாரம் போடப்பட்டிருக்கும் SETI நிறுவனத்தில் பணிபுரியும் ஆய்வாளர்கள், “புத்திநுட்பமுள்ள உயிர்கள் இருப்பதற்கான மறுக்கமுடியாத நிரூபணத்தை அளிக்கும் ஒழுங்கான அறிகுறிகளைப் பெற்றனர்.” என்றபோதிலும், கூடுதலான ஆய்வுக்குப் பிறகு, அந்த ரேடியோ அறிகுறிகள் “ET-யிடமிருந்து (நில உலகுக்குப் புறம்பானவர்கள்) வந்துகொண்டிருக்கவில்லை, ஆனால் கீழ்த்தளத்திலுள்ள நுண்ணலை அடுப்பிலிருந்து வந்துகொண்டிருந்தது” என்பதை அந்தக் குழு கண்டறிந்தது. SETI நிறுவனம் ஏமாற்றப்பட்டிருப்பது முதல் தடவையல்ல என்று நியூ சயன்டிஸ்ட் குறிப்பிடுகிறது. “தவறான அறிகுறிகளில் பெரும்பாலானவை செயற்கைக்கோள்களிலிருந்து வந்த அறிகுறிகளாய் இருந்தன” என்று ஆஸ்திரேலியாவில் விண்ணை நுட்ப ஆராய்ச்சி செய்துவந்த ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 1995-ல் SETI-யால் கண்டறியப்பட்டுள்ள ரேடியோ அறிகுறிகள் அனைத்தும், “எங்கள் சொந்த தொழில் நுட்பத்திலிருந்து வருபவையாய்” இருந்தனவென்று அமெரிக்க விண்வெளி சங்கத்திடம் SETI-யின் சார்புரிமைத் தகவலர் (spokesman) ஒப்புக்கொண்டார்.

புதிய நீர்வழி

பிரேஸிலைச் சேர்ந்த நகரமான காஸரேஸிலிருந்து தென்புறமாக அர்ஜன்டினாவின் நதியான பிளேட்டா வரை 3,450 கிலோமீட்டருக்கும் மேல் செல்லும் ஒரு புதிய நீர்வழி திறக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. அது பரனா மற்றும் பரகுவே நதிகளை இணைக்கும். இந்த நீர்வழி, அல்லது ஈட்ரோவீயா, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூர மோசமான சாலைகளுக்கு மாற்றுப்பாதையாக அமையும். அது சோயா மொச்சை, பருத்தி, தானியம், இரும்புத்தாது, சுண்ணாம்பு, மங்கனீஸ், மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளைக் கொண்டுசெல்வதை எளிதாக்குகிறது. இந்த ஈட்ரோவீயா, அர்ஜன்டினா, பிரேஸில், பரகுவே, உருகுவே மற்றும் தரைமார்க்கம் மூடப்பட்டுள்ள பொலிவியா ஆகிய நாடுகள் சேர்ந்து செய்யவிருக்கும் ஒரு கூட்டுத் திட்டமாய் இருக்கிறது. தி இக்கானமிஸ்ட் பத்திரிகையின்படி, “திடீரென்று முக்கியத்துவம் பெறவிருக்கும், உபகண்டத்தை ஒத்த முக்கிய நிலப்பகுதியிலிருந்து சரக்குகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் ஃபெர்ரி சேவை செய்யும் தென் அமெரிக்க மிஸ்ஸிஸிபியாக விரிவாக்கத்தினர் இதைக் காண்கின்றனர்.”

பை-யின் மதிப்பு

பலர் பள்ளியில் கற்றதைப்போல், ‘பை’ என்பது, ஒரு வட்டத்தின் பரிதிக்கும் (circumference) அதன் விட்டத்துக்கும் இடையே உள்ள விகிதமாகும். பை-யின் தோராய (approximate) மதிப்பு 3.14159 என்பதாக வைத்துப் பலரால் திருப்தியுடன் கணிதம் போடமுடியும். ஆனால் ‘பை’ துல்லியமான எண்ணாக இல்லாதிருப்பதால், பை-யின் தசம ஸ்தான திருத்த மதிப்புக்கு (decimal places) முடிவே இல்லை. 18-வது நூற்றாண்டில், 100 தசம ஸ்தான திருத்த மதிப்பு ஒன்று பெறப்பட்டது. 1973-ல் பிரெஞ்சு கணித மேதைகள் இருவர் பத்து லட்ச தசம ஸ்தான திருத்தத்தில் ஒரு மதிப்பைப் பெற்றனர். இப்போது, ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யாசூமாஸா கானாடா அந்த மதிப்பை ஒரு கம்ப்யூட்டரின் உதவியுடன் கணக்கிட்டுள்ளார். அது 600 கோடி தசம ஸ்தான திருத்தத்துக்கும் மேலானது. இந்த மதிப்பைப் பயன்படுத்துவதாகக் கற்பனை செய்யும் நிலை இல்லை. ஏனெனில், “அறியப்பட்டிருக்கும் அண்டத்தினுடைய பரிதியின் ஆரத்தைக் கணக்கிடுவதற்கு 39 தசம ஸ்தான திருத்தத்தைக் கொண்ட பை-யின் மதிப்பே போதுமானது. ஏனெனில் அவ்வாறு கணக்கிடும்போது அப்படியே பிழை ஏற்பட்டாலும், அந்தப் பிழை, ஹைட்ரஜன் அணுவினுடைய ஆரத்தின் அளவுக்குள்தான் இருக்கும்” என்பதாக லண்டனின் பத்திரிகையான தி டைம்ஸ் குறிப்பிடுகிறது. “பை-யின் மதிப்பைக் கணக்கிடுவதை ஒரு சவாலாகக் காண்பதால்,” பை-யின் மதிப்பைக் கணக்கிடுவதில் தான் இன்பம் காண்பதாக பேராசிரியர் கானாடா கூறுகிறார். ஆனால் அவர் கண்டறிந்துள்ள விடையை சொல்லிப்பார்க்க முயலாதீர்கள். “நிறுத்தாமல், நொடிக்கு ஒரு ஸ்தானமாக சொல்ல ஆரம்பித்தால், அதைச் சொல்லி முடிக்க சுமார் 200 ஆண்டுகள் எடுக்கும்” என்று தி டைம்ஸ் கூறுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்