உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 1/8 பக். 4-5
  • பேராசை—நமக்கு என்ன செய்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பேராசை—நமக்கு என்ன செய்கிறது?
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பட்டினி கிடப்பவர்களும் சாகக் கிடப்பவர்களும்
  • அடிமையாக்கப்பட்டோர்
  • பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே வளர்ந்துவரும் இடைவெளி
  • பேராசை என்னும் கண்ணியைத் தவிர்ப்பதில் வெற்றிபெறுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • “பேராசையின் சகாப்தம்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • பேராசை இல்லாத ஓர் உலகத்தைக் கற்பனை செய்துபாருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • பேராசை நிறைந்த உலகில் பிழைத்தல்
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 1/8 பக். 4-5

பேராசை—நமக்கு என்ன செய்கிறது?

பேராசை கோடிக்கணக்கானோரது வாழ்க்கையை சின்னாபின்னமாக்குகிறது. பேராசையுள்ள ஆட்களின் மனிதத்தன்மையைப் பறித்து, அவர்களால் பாதிக்கப்படுவோருக்கு வேதனையையும் துயரத்தையும் அது கொடுக்கிறது. மற்றவர்களது பேராசையினால் உங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறதென்பதை உங்களாலேயே ஒருவேளை உணரமுடியும். சாதாரண திருட்டும்கூட நீங்கள் வாங்கும் பொருட்களின் விலையை அதிகரிக்கிறது. உங்கள் சம்பளம் குறைவாக இருந்து, அத்தியாவசிய சாமான்களின் விலை உங்களுக்கு கட்டுப்படியாகாவிட்டால், ஒருவேளை நீங்கள் வேறு ஒருவரது பேராசையால் பாதிக்கப்பட்டவராக இருக்கிறீர்கள்.

பட்டினி கிடப்பவர்களும் சாகக் கிடப்பவர்களும்

பேராசைமிக்க தேசிய சுயநலம், ஏழைகளுக்கு பலனளிக்கும் விதத்தில் உதவ அரசாங்கங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. 1952-லேயே, விஞ்ஞானியும் சத்துணவு நிபுணருமான சர் ஜான் பாய்ட் ஆர் இவ்வாறு சொன்னார்: “மனிதர்களையும் வளங்களையும் ஒரு உலகப் போருக்காக ஒருங்கிணைக்க அரசாங்கங்கள் தயாராயிருக்கின்றன, ஆனால் உலகத்திலிருந்து பசியையும் வறுமையையும் அடியோடு நீக்குவதற்காக அந்த வல்லமைமிக்க அதிகாரங்கள் ஒன்றுசேர தயாராயில்லை.”—ஆன் புச்சனன் எழுதிய புத்தகமாகிய உணவு வறுமை மற்றும் அதிகாரம் (ஆங்கிலம்).

நிச்சயமாகவே, சிறிதளவு உதவி அளிக்கப்படுகிறது. ஆனால் ஏழ்மையான, உலகத்தில் கவனிப்பாரில்லாமல் ஒதுக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான மக்களது வாழ்க்கையின் உண்மையான நிலை என்ன? சமீபத்தில் வெளிவந்த ஒரு அறிக்கையின்படி, சில இடங்களில் உணவு உற்பத்தி அதிகமாக இருந்தாலும் “பசியும் ஊட்டக்குறைவும் இன்னும் உலகத்திலுள்ள பெரும்பான்மையான ஏழைகளை கவ்விக்கொண்டிருக்கின்றன . . . உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் [100 கோடிக்கும் அதிகமானோர்] ஒவ்வொரு நாளும் பட்டினி கிடக்கின்றனர்.” அந்த அறிக்கை மேலும் சொல்கிறது: “கூடுதலாக, 200 கோடி மக்கள் ஊட்டக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; இதற்குக் காரணம் . . . [ஆகார] பற்றாக்குறை, இது ஆபத்தான உடற்கோளாறுகளை உண்டாக்கலாம்.” (டெவலப்ட் டு டெத்—ரீதிங்கிங் தர்ட் உவர்ல்ட் டெவலப்மென்ட்) இந்தக் கணக்குவிவரம் நிச்சயமாகவே தலைப்புச்செய்தியின் அந்தஸ்தைப் பெற வேண்டும்!

அடிமையாக்கப்பட்டோர்

குற்றச்செயல் மாஃபியாக்கள், பாதிக்கப்பட்டோருக்கும் பொது மக்களுக்கும் தீங்கிழைத்து செல்வம் குவிக்கின்றன. போதைப்பொருட்கள், வன்முறை, விபச்சாரம் மற்றும் பொருளாதார சுரண்டல் ஆகியவை கோடிக்கணக்கானோரை அடிமைகளாக்கியிருக்கின்றன. மேலும், “அடிமை ஒழிப்பு அமைப்பின்படி, உலகில் 20 கோடி அடிமைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அவர்களில் சுமார் 10 கோடியினர் பிள்ளைகள்,” என்பதாக அடிமையாக்கப்பட்டோர் என்ற ஆங்கில புத்தகத்தில் கார்டன் தாமஸ் சொல்கிறார். அடிப்படைக் காரணமென்ன? அந்த அறிக்கை இவ்வாறு விவரிக்கிறது: “அடிமையாக்குவதற்கான தூண்டுதல் மனித இயல்பின் இருள் நிறைந்த பக்கமாக தொடர்ந்து இருக்கிறது . . . [அடிமைத்தனம் என்பது] இச்சை, பேராசை, அதிகார ஆசை ஆகியவற்றின் விளைவு.”

அதிகாரமுள்ளோர், பலவீனமான, எளிதில் தாக்குதலுக்கு ஆளாகும் ஆட்களிடமிருந்து அனைத்தையும் பறித்து அவர்களில் அநேகரை கொல்லுகின்றனர். “வெள்ளைக்காரர்கள் முதன்முதலில் பிரேஸிலில் நுழைந்தபோது அங்கு வாழ்ந்துகொண்டிருந்த இருபது லட்சம் இந்தியர்களில் இப்போது ஒருவேளை இரண்டு லட்சம்பேர்தான் இருப்பார்கள்.” (தி நேக்கட் சாவேஜ்) ஏன்? அடிப்படைக் காரணம் பேராசையாகும்.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே வளர்ந்துவரும் இடைவெளி

ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் ஒரு நிர்வாகியான ஜேம்ஸ் குஸ்டாவ் ஸ்பெத் இவ்வாறு சொன்னதாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது: “உருவாகிவரும் உலகளாவிய உயர்ந்தோர் சமுதாயம் . . . அதிக செல்வத்தையும் அதிகாரத்தையும் குவித்துக்கொண்டிருக்கிறது, ஆனால் அதே சமயத்தில் மனிதவர்க்கத்தில் பாதிக்கும் அதிகமானோர் மிக ஏழ்மையான நிலையில் விடப்பட்டிருக்கின்றனர்.” பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள இந்த ஆபத்தான இடைவெளி அவரது வார்த்தைகளில் இன்னும் தெளிவாக காண்பிக்கப்பட்டிருக்கிறது: “இந்தக் கிரகத்தில் வாழும் மக்களில் இப்போதும்கூட பாதிக்கும் அதிகமானோர்—300 கோடிக்கும் அதிகமானோர்—நாள் ஒன்றுக்கு $2-க்கும் குறைவான வருமானத்தைப் பெறுகிறார்கள்.” அவர் இவ்வாறு கூடுதலாக சொன்னார்: “ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடுள்ள இந்த உலகிலிருக்கும் ஏழைகளுக்கு, இந்த நிலைமை, நம்பிக்கையற்ற உணர்ச்சியையும் கோபத்தையும் ஏமாற்ற உணர்ச்சியையும் ஊட்டி வளர்க்கிறது.”

அநேக பணக்காரர்கள் வறுமையாலும் பசியாலும் வாடிவதங்கும் பொதுமக்களை நியாயமாகவோ எந்த விதமான ஈவு இரக்கத்தோடோ நடத்துவதில்லை என்ற உண்மைதானே நம்பிக்கையற்ற உணர்வை அதிகரிக்கிறது.

பேராசையால் பாதிக்கப்பட்டோர் எங்கும் இருக்கின்றனர். உதாரணத்திற்கு, போஸ்னியா, ருவாண்டா மற்றும் லைபீரியாவில் அதிகாரத்திற்கான போராட்டத்தில் மாட்டிக்கொண்ட அகதிகளின் கண்களில் தெரியும் கலக்கத்தைக் கவனியுங்கள். ஏராளமாய் பொருட்கள் குவிந்திருக்கும் உலகில் பட்டினியால் வாடுவோரின் முகங்களில் தவிப்பு தாண்டவமாடுவதைப் பாருங்கள். இவை எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது என்ன? ஒரு விதத்தில் இல்லாவிட்டால் இன்னொரு விதத்தில் பேராசை!

பகைமை நிறைந்த இப்படிப்பட்ட ஓர் உலகில், பேராசையுடன் சூறையாடுபவர்களால் சூழப்பட்டிருக்கும்போது நீங்கள் எவ்வாறு பிழைக்கலாம்? அடுத்த இரண்டு கட்டுரைகள் இந்தக் கேள்வியை கலந்தாலோசிக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்