நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—மாலை நேரத்தின்போது
1 இயேசு கிறிஸ்துவின் ஆரம்ப கால சீஷர்கள் சிலரிடம் யூதேய பிரதான ஆசாரியன் பின்வருமாறு சொன்னான்: “எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பினீர்கள்.” (அப். 5:28) அந்தப் பட்டணத்தில் சகோதரர்கள் சிறந்த சாட்சி கொடுத்தல் வேலையைச் செய்திருந்தனர் என்பது தெளிவாக இருக்கிறது, தங்கள் பிராந்தியத்திலுள்ள ஒவ்வொருவரையும் சந்திக்க அவர்கள் ஊக்கமாக வேலை செய்தனர் என்பதில் சந்தேகமேயில்லை. அவர்கள் தொடர்ந்து அங்கேயும், மற்ற இடங்களிலும் ஒரு முழுமையான சாட்சியை கொடுத்து வந்தனர்.—அப். 8:25.
2 அநேக இடங்களில் இன்று, சத்தியத்தை கற்பித்தலைக் கொண்டு நம் பிராந்தியத்தை நாம் நிரப்பியிருக்கிறோம். பிரஸ்தாபிகளில் மிகச் சிறந்த அதிகரிப்பு இருந்திருக்கிறது, அதற்கு சரிசமமாக சபைகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு இருந்திருக்கிறது. பிராந்தியங்கள் சிறியதாகிவிட்டிருக்கின்றன, அவைகள் அடிக்கடி செய்யப்பட்டும் வருகின்றன. நற்செய்திபோடு அதிகமான ஜனங்களை எட்டுவதற்கு நம்முடைய பிராந்தியத்தை நாம் விரிவாக்குவது அவசியமாகிவிட்டிருக்கிறது.
மாலை நேர சாட்சி கொடுப்பதின் நன்மைகள்
3 மாலை நேரங்களில் வீடுகளை சந்திப்பதன் மூலம் தங்கள் பிராந்தியங்களை விரிவாக்கலாம் என்று அநேக பிரஸ்தாபிகள் கண்டிருக்கின்றனர். பகல் வேளையின் போது பொதுவாக வீட்டில் இல்லாத அநேக வீட்டுக்காரர்களை அவர்கள் அந்த நேரத்தில் சந்திக்க முடிகிறது. மாலை நேரத்தில் தங்கள் பிராந்தியத்திலுள்ள ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவரை காண முடிவதாக பிரஸ்தாபிகள் அறிக்கை செய்திருக்கின்றனர். அநேக ஜனங்கள் வீட்டிலிருப்பது மட்டும் அல்லாமல், பொதுவாக அதிக ஓய்வான மனநிலையிலும், நம்முடைய செய்திக்கு செவி கொடுக்க மனமுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். வட்டாரக் கண்காணிகளால் அநேக சபைகளின் மாலை நேர சாட்சி கொடுக்கும் ஏற்பாடுகளை ஒழுங்கமைக்க உதவி செய்ய முடிந்திருக்கிறது. வட்டாரக் கண்காணியின் விஜயத்தின் போது, எல்லாப் பிரஸ்தாபிகளும் இந்த ஒழுங்கான புதன் கிழமை மாலை ஊழிய அம்சத்துக்கு ஆதரவு தருமாறு உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.
4 உங்கள் பிராந்தியத்தில் மாலை நேரத்தின் போது சாட்சி கொடுப்பதை நீங்கள் முயற்சி செய்திருக்கிறீர்களா? கோட காலத்தில் சூரியன் நேரங்கழித்து அஸ்தமனமாகிறதால், மற்ற சமயங்களைவிட அதிக நேரம் வெளியில் இருப்பதற்கான வாய்ப்பு நமக்கு இருக்கிறது. மாலை நேரத்தின் ஒரு பகுதி, வீட்டுக்கு வீடு சாட்சி கொடுப்பதற்கு அல்லது நாம் சந்தித்தபோது வீட்டில் இல்லாதவர்களை மறுபடியும் சந்திக்கச் செல்வதற்கு உபயோகிக்கப்படலாம். பின்னர், ஒருவேளை மாலையின் பிற்பகுதியில், நாம் மறுசந்திப்புகள் செய்யலாம் அல்லது ஒரு பைபிள் படிப்பை நடத்தலாம். வருடத்தின் பிற்பகுதியில் பகல்நேர வெளிச்ச மணிநேரங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், மாலை நேரத்தின் ஆரம்ப பகுதியை வீட்டுக்கு வீடு சாட்சி கொடுப்பதற்கு நாம் உபயோகப்படுத்த முடியும். இருளடைந்த பிறகு பாதுகாப்பாக இல்லாத இடங்களில் சாட்சி கொடுக்கும் போது நாம் தெளிந்த புத்தியையும், காலமறிந்து செயலாற்றும் தன்மையையும் காண்பிக்க வேண்டும்.
பிறர் நலத்தை கருதுபவர்களாக இருங்கள்
5 மாலை நேர சாட்சி கொடுப்பதில் வெற்றிகரமாக இருப்பதற்கு, சில அடிப்படை குறிப்புகளை நாம் மனதில் வைப்பது அவசியமாயிருக்கிறது. உதாரணமாக, சில இடங்களில் உள்ள ஜனங்கள் மாலை நேரத்தில் எதிர்பாராமல் வருகை தருவோரைப் பற்றி பயப்படுகின்றனர், எனவே நம்முடைய முன்னுரைகளில் நாம் அனலோடும், சிநேகப்பான்மையோடும் இருக்கவும், நம் விஜயத்தின் நோக்கத்தை விரைவில் தெளிவாக்கவும் விரும்புகிறோம். வீட்டுக்காரர்களின் நலனில் உண்மையான அக்கறையை நாம் தெரிவித்தால் அவர்கள் பதட்டமின்றி இருக்கவும், மேலும் மனம்விட்டு நம்மிடம் பேசவும் கூடும்.
6 சில இடங்களில், வீட்டுக்காரர்கள் தங்கள் பாதுகாப்பை காத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றனர். இதனால் நாம் ஓர் இன்டர்காமை உபயோகிக்க வேண்டியது இருக்கலாம், அல்லது வீட்டுக்காரர்கள் மூடப்பட்ட கதவின் வழியாக நம்மிடம் பேசலாம், அல்லது கதவிலிருக்கும் பார்க்கும் துளை வழியாய் நம்மை பார்க்க விரும்பலாம். வீட்டுக்காரர் செய்திருக்கும் ஏற்பாடுகளை நாம் மதிப்பதன் மூலம், அவரோடு நாம் பகிர்ந்து கொள்ள விரும்பும் சத்தியத்திற்குச் செவி கொடுக்க அவர் அதிக விருப்பமுள்ளவராய் இருப்பார்.
7 அநேக சபைகள் வாரத்தின்போது, ஒன்று அல்லது அதற்கும் அதிகமான மாலை வேளைகளில் தொகுதியாக சாட்சி கொடுப்பதை அட்டவணையிட்டிருக்கின்றனர். இது முழுநேரமாக உலகப்பிரகாரமான வேலையிலிருக்கும் பிரஸ்தாபிகளுக்கு ஊழியத்தில் பங்கு கொள்வதற்கு அதிகமான சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறது, முரண்படும் வேலை அட்டவணைகளின் காரணமாக, இதற்கு முன்னால் ஒருபோதும் வேலை செய்யமுடியாத சில பிரஸ்தாபிகளோடு ஊழியம் செய்யமுடிகிறது. மாலை நேர சாட்சி கொடுப்பது, சில பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்தில் தாங்கள் செலவழிக்கும் நேரத்தை அதிகரிக்க சாத்தியமாயிருக்கிறது, இது அவர்கள் மற்றவர்களோடு நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் அதிக தேர்ந்தவர்களாக ஆக அவர்களை வழிநடத்தியிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுக்கு இதற்கு முன்பாக செவி கொடுக்காத தனிப்பட்ட நபர்களை சந்தித்ததன் விளைவாக அநேக வேதப் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
8 மாலைநேர சாட்சி கொடுக்கும் வேலையில் நீங்கள் பங்குகொண்டு “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்வதற்கு” இந்தக் கூடுதலான வாய்ப்பை அனுபவிக்க முடியுமா? (2 தீமோ. 4:5) நம்மில் அதிகம் பேர் அந்தக் கேள்விக்கு ஆம் என பதிலளிக்க முடிந்தால், நாமும்கூட சத்தியத்தால் பிராந்தியத்தை நிரப்புவதில் ஒரு மேலான வேலையை செய்வோம்.