உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/98 பக். 2
  • பிப்ரவரி ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • துணை தலைப்புகள்
  • பிப்ரவரி 2-ல் துவங்கும் வாரம்
  • பிப்ரவரி 9- ல் துவங்கும் வாரம்
  • பிப்ரவரி 16- ல் துவங்கும் வாரம்
  • பிப்ரவரி 23- ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 2/98 பக். 2

பிப்ரவரி ஊழியக் கூட்டங்கள்

பிப்ரவரி 2-ல் துவங்கும் வாரம்

பாட்டு 166

10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.

15 நிமி:“யெகோவாவின் சாட்சிகள் உண்மையான சுவிசேஷகர்கள்.” கேள்விகளும் பதில்களும். டிசம்பர் 1, 1992, காவற்கோபுரம் பக்கம் 19-லுள்ள பெட்டியை மறுபார்வை செய்யுங்கள்.

20 நிமி:“தாகமுள்ள அனைவரையும் அழையுங்கள்.” இக்கட்டுரையை மறுபார்வை செய்து, இதில் ஆலோசனையாக கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்கள் கேட்போரை ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் பிரதிபலிக்கச் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுங்கள். 2-3 அல்லது 4-5 பாராக்களை பெரியவராலும் 6-வது பாராவை இளைஞராலும் நடித்துக் காட்டும்படி செய்யுங்கள்.

பாட்டு 208, முடிவு ஜெபம்.

பிப்ரவரி 9- ல் துவங்கும் வாரம்

பாட்டு 96

10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. “புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல்” பாகத்தை மறுபார்வை செய்யுங்கள்.

15 நிமி: சபை தேவைகள்.

20 நிமி: “எல்லா மொழியினருக்கும் மதத்தினருக்கும் சாட்சிகொடுத்தல்.” (பாராக்கள் 1-8) கேள்விகளும் பதில்களும். உங்கள் பிராந்தியத்தில் உள்ளூர் பாஷை தவிர மற்ற எந்தெந்த பாஷைகளை பெரும்பாலானோர் பேசுகின்றனர் என்பதை கண்டறிந்து, அத்தகைய மொழிகளில் என்னென்ன பிரசுரங்கள் சபையின் கையிருப்பில் இருக்கின்றன என்பதைக் காட்டுங்கள். பாரா 8-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, எல்லா தேசத்தாருக்கு நற்செய்தி என்ற சிறுபுத்தகத்தின் பயனைக் குறித்து யாரேனும் ஒருவரை நடித்துக் காட்ட செய்யுங்கள்.

பாட்டு 220, முடிவு ஜெபம்.

பிப்ரவரி 16- ல் துவங்கும் வாரம்

பாட்டு 75

5 நிமி: சபை அறிவிப்புகள்.

12 நிமி: சபை கூட்டங்களுக்கு நீங்கள் ஆஜராவதன் அவசியமென்ன. ஆகஸ்ட் 15, 1993, காவற்கோபுரம் பக்கங்கள் 8 முதல் 11 வரையிலுள்ள முக்கிய குறிப்புகளை மூப்பர் கலந்து பேசுகிறார். தொடர்ந்து எல்லா கூட்டங்களுக்கும் ஆஜராவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுகிறார்.

18 நிமி: “எல்லா மொழியினருக்கும் மதத்தினருக்கும் சாட்சிகொடுத்தல்.” (பாராக்கள் 9-24) கேள்விகளும் பதில்களும். இந்து, முஸ்லீம், புத்த, யூத மதத்தினரிடமாக உள்ளூரில் பெரும்பாலானோர் எந்த மதத்தினரோ அவர்களிடமாக சாட்சிகொடுக்கும்போது எவ்வாறு உரையாடலை ஆரம்பிப்பது என்பதைக் குறித்து அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபி நடித்துக் காட்டும்படி செய்யுங்கள்.

10 நிமி: “யெகோவா எனக்கு சகாயர்.” அன்பாகவும், உற்சாகமாகவும் மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு.

பாட்டு 15, முடிவு ஜெபம்.

பிப்ரவரி 23- ல் துவங்கும் வாரம்

பாட்டு 4

10 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச் மாதத்தின் பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். அறிவு புத்தகம் அளிப்பதைக் குறித்து மார்ச் 1996 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 4-ல் கொடுக்கப்பட்டிருக்கிற பயனுள்ள குறிப்புகளிலிருந்து ஓரிரண்டை எடுத்துக்கூறுங்கள். வீட்டு பைபிள் படிப்புகள் துவங்குவதை இலக்காக கொள்ள வலியுறுத்துங்கள்.

15 நிமி: “அது பலனளித்தால், அதைப் பயன்படுத்துங்கள்!” கேள்விகளும் பதில்களும். எளிமையாகவும் நன்கு பலனளிக்கக்கூடிய விதத்திலும் பிரசங்கங்கள் இருந்ததால் தொடர்ந்து அவற்றை பயன்படுத்தியதைப் பற்றி சபையிலுள்ள ஓரிரண்டு அனுபவமிக்க பிரஸ்தாபிகளிடம் சுருக்கமாக கேளுங்கள். பின்னர் நம் ராஜ்ய ஊழியத்திலிருக்கும் சமீபத்தில் வந்த அணுகுமுறையை பயன்படுத்தி, அவை பலன்தருபவையாய் இருப்பதைக் கண்ட சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்படி செய்யுங்கள்.

20 நிமி: உங்களுடைய பிரசங்கங்களை பழகிக்கொள்ளுங்கள். பள்ளி துணைநூல் பக்கங்கள் 98-9, பாராக்கள் 8, 9-ன் அடிப்படையில் கொடுக்கப்படும் சுருக்கமான பேச்சு. நம்முடைய பிரசங்கங்களை பகுப்பாய்வு செய்வது மற்றும் அவற்றை நன்கு பலனளிக்கக்கூடிய வகையில் மாற்றுவதற்கான வழிகளைத் தேடுவது ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்துங்கள். இரண்டு சகோதரிகளை, அவர்கள் ஒரு வீட்டில் என்ன சொன்னார்கள், அதனை முன்னேற்றுவிக்க எவ்வாறு கலந்தாலோசித்து பகுப்பாய்வு செய்கிறார்கள் என்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். மேலும் அவர்கள் அடுத்தமுறை பயன்படுத்த திட்டமிடும் பிரசங்கத்தை பழகிப்பார்ப்பதற்கென நேரம் எடுத்து ஒருவருக்கொருவர் உதவியான ஆலோசனைகளை பரிமாறிக் கொள்கிறார்கள். முடிவாக, பிரசங்கங்களை பகுப்பாய்வு செய்து அவற்றை பழகிப்பார்க்கும்படி அனைவரையும் அக்கிராசனர் உற்சாகப்படுத்துகிறார்.

பாட்டு 103, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்