உலகத்தைக் கவனித்தல்
கியுபாவுக்கு சர்ச்சின் ஆசீர்வாதம்
ஹவானா வத்திக்கான் தூதரகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் போப்பின் பிரதிநிதி கார்டினல் எட்வர்டோ பிரோனியோ கியூபாவின் துணைத் தலைவர் கர்லாஸ் ராஃபேல் ராட்ரிக்ஸின் கைகளைக் குலுக்கி கட்டியணைத்தார்; ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும் கியூபா அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் ஒப்புறவின் சின்னமாக இது இருந்தது. கியூபாவின் கத்தோலிக்க மத நடவடிக்கைகளுக்கான புதிய சுதந்தரத்தை முன்னிட்டு சர்ச்சின் ஆசீர்வாதம் அருளப்பட்டது. “கம்யூனிஸ்ட் நாடுகளிடமான வத்திக்கானின் அயல்நாட்டுக் கொள்கையில் ஒரு புதிய பக்கம் திறந்திருக்கிறது,” என்றார் ஹவானா பல்கலைக்கழகத்தில் சர்ச் சரித்திர பேராசிரியர் என்ரிக் லோப்பஸ் ஒலிவா என்று தி மியாமி ஹெரால்டு அறிக்கை செய்தது.
படப்பிடிப்பில் ஹேலீஸ் காமெட்
சோவியத் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கூடியிருந்த விஞ்ஞானிகள் பூமியினிடமாக பயணம் செய்யும் 10,90,00,000 மைல் (17,50,00,000 கி.மீ) பயணத்தை ஆரம்பித்த ஹேலீஸ் வால் நட்சத்திரத்தின் ஐஸ் போன்ற கருப்பகுதியைப் புகைப்படமெடுப்பதற்கு ஒன்பது நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அதன் உருவம் திரையில் காட்சியிட்டபோது நிறுவனத்தின் முக்கிய காட்சியறையில் கைத்தட்டுதலும் ஆரவாரமும் தொடர்ந்திருந்தது. வேகா 1 என்ற மனிதனில்லாத சோவியத் விண்வெளிக்கலம் அந்த வால்நட்சத்திரத்தை வினாடிக்கு 47 மைல் (76 கி.மீ) வேகத்தில் கடந்த போது மூன்று மணிநேரத்தில் 500 தொலைக்காட்சி “படங்களைப்” பிடித்தது. இந்த விண்வெளிக்கலம் அந்த வால்நட்சத்திரத்தின் கருப்பகுதிக்கு 5,500 மைல் (8,900 கி.மீ) பக்கத்தில் சென்றது. 12 நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்த நூற்றுக்கும் அதிகமான விஞ்ஞானிகளில் ஒருவரான ஹங்கேரி பெளதீக நிபுணர் இந்த வால்நட்சத்திரத்தின் கருப்பகுதியைப் படம் பிடிக்கும் அந்த முக்கிய நிகழ்ச்சியை “சஹாரா மணற்காற்றில் ஐஃபெல் கோபுரத்தைப் பார்ப்பது போலிருந்தது,” என்று விவரித்தார்.
சீனர் பிரச்னைகள்
சீனா அன்மையில் பல நூறாயிரக்கணக்கான கைப்பட இருக்கும் கம்ப்யூட்டர்களை (Personal Computers) இறக்குமதி செய்திருந்தும் அவற்றில் 70 சதவிகிதம் இன்னும் பயன்படுத்தப்படாத நிலையிலிருக்கிறது. ஏன்? சீன மொழி எழுத்துக்களைக் கம்ப்யூட்டரில் பதிவு செயவதற்கான 400 வித்தியாசமான முறைகளில், பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட முறை இருக்கவில்லை. சீன மொழி எழுத்துக்களை மாற்றியமைத்து நடைமுறையிலிருந்துவரும் 6,000 சீன மொழி எழுத்துக்களை நிராகரித்து விடுவதற்கான முயற்சிகள் இப்பொழுது கைவிடப்பட்டது. இதற்குள்ளாக, நூறுகோடி மக்களை ஒரே மொழி பேசுவதற்கான இலக்கையும் அடைய அதிகாரிகள் முயற்சித்திருக்கின்றனர். ஏனென்றால் அங்கிருக்கும் இருபதுக்கும் அதிகமான மொழிகளைக் கவனிக்குமிடத்து இது அவ்வளவு எளிய காரியமல்ல. மான்டரின் மொழி சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியாயிருந்தபோதிலும், தெற்கு சீனா பகுதியிலும் (ஹாங்காங்கிலும்) பெரும்பான்மையினர் கான்டனீஸ் மொழி பேசுகின்றனர். ஷாங்ஹாயிய், ஃபக்கினீஸ், மற்றும் பல மொழிகள் 56 சிறுபான்மை மக்கள் தொகுதியினரின் மொழிகளாகும்.
விற்பனைக்குப் பிள்ளைகள்
மனிலாவில் 8 முதல் 14 வயதிலிருக்கும் பத்தாயிரம் பெண் பிள்ளைகள் தங்களையே விபச்சாரத் தொழிலுக்கு விற்றுக் கொள்கிறார்கள் என்று ஜெர்மனியின் தினசரி ஸ்டர்ன் அறிக்கை செய்கிறது. உவர்ல்டு பிரஸ் ரிவ்யூ-வில் அறிக்கை செய்தபடி, வேலையில்லா திண்டாட்டமும் வறுமையும் அதிகமதிகமான ஆட்களை நகர் புறங்களுக்கு அனுப்பியிருக்கிறது, அங்கு பிள்ளைகளில் பலர் குற்றச் செயலிலும் விபச்சாரத்திலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஆனால் மற்ற இடங்களிலும் இப்படி நடக்கிறது. பெல்கிரேட் தினசரியாகிய பொலிட்டிக்கா, 1975 முதல், பத்தாயிரம் யுகொஸ்லேவியா பிள்ளைகள் (7 முதல் 13 வயது) இத்தாலியிலுள்ள திருடர்களுக்கு விற்றுப்போடப்பட்டிருக்கின்றனர் என்று அறிக்கை செய்கிறது. அங்கு அவர்கள் கைப் பைகளைப் பிடுங்கியோடுவதற்கும் ஜோப்படி கொள்ளையடிப்பதற்கும் அல்லது வீடுகளிலும் வாகனங்களிலும் கொள்ளையடிப்பதற்கும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். தங்களுக்கு வேண்டியளவு பொருட்களைத் திருடிக் கொண்டுவராவிட்டால் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் பிடிபட்டாலும் இத்தாலியின் சட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குற்றச் செயலுக்காக தண்டனையளிக்கப்படமாட்டர்கள்.
வியாபாரம் இல்லை
பிரசுரிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பின்பு ஜப்பானிய மொழி ரீடர்ஸ் டைஜஸ்ட் இனிமேலும் அச்சிடப்படாது. 1946-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பத்திரிக்கை ஒரு சமயத்தில் 14 லட்சம் பிரதிகள் விநியோகிக்கப்படும் பெருமையைக் கொண்டிருந்தது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்பு, இந்தப் பிரசுரம், ஜப்பானில் வாசிப்பதற்கான அத்தியாவசியமான ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் வெளியுலகத்தில் நடக்கும் சம்பவங்களை அறிவிக்கும் ஒரு கருவியாகவும் திகழ்ந்து வந்தது. ஆனால் விற்பனை ஒரே நிலையிலிருந்து, பின்பு மாதத்திற்கு சராசரி 4,50,000 பிரதி என்றளவுக்கு குறைந்துவிட்டது. விநியோகிப்புக் குறைவும், உயர்ந்த தபால் செலவும், கம்பெனியின் நிர்வாக முறையும் அதன் தோல்விக்குக் காரணங்களாகக் கூறப்படுகிறது.
புகைபிடிப்பவரின் முகம்
துணை மருத்துவர் டாக்டர் டகளஸ் மாடல் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, நீங்கள் புகைபிடிக்கும் ஒருவராயிருந்தால், அந்த உண்மை உங்கள் முகமெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது. புகைபிடிக்கும் ஒருவரின் முகம் சுருக்கம் விழுந்து, சோர்வு மிகுந்து, அருவருப்புத் தோற்றமுடையதாய் காணப்படும். அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டபடி, “கண்களின் ஓரத்தில் காகத்தின் கால்கள் போன்ற தோற்றமும், உதடுகளிலிருந்து செங்கோண சுருக்கங்களும், அல்லது கண்ணங்களிலும் தாடைகளிலும் ஆழமான கோடுகளும் புகைபிடிப்பவரின் முகத்திற்கு அறிகுறிகளாகும்.” மற்றும் தோய்ந்த தோற்றமும் “சாம்பல், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தோற்றமுங்கூட” அறிகுறிகளாகும். தோலில் இரத்த ஓட்டக்குறைவால் ஏற்படும் “ஒரு நச்சுத்தன்மையால்” இது ஏற்படுகிறது என்று மாடல் நம்புகிறார். ஆய்வில் உட்பட்டிருந்த 41 புகைபிடிக்கும் ஆட்களில் 19 பேரில் “புகைபிடிப்பவரின் முகம்” காணப்பட்டது. என்றபோதில் புகைபிடிக்காதிருந்த 38 பேரில் இந்த முகம் எவரிலும் காணப்படவில்லை. அவருடைய ஆய்வு பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகையில் அறிக்கை செய்யப்பட்டது.
பெரும் நாசத்திலிருந்து கற்ற பாடங்கள்
மெக்ஸிக்கோவில் 1985 செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரின் கீழ்ப்பகுதியிலுள்ள “எல்லா கட்டிடங்களையுமே தரைமட்டமாக்கியிருக்கும்” என்று சயன்ஸ் நியூஸ் அறிக்கை செய்கிறது. மெக்ஸிக்கோ நகரம் “உலகின் மிகச் சிறந்த கட்டிட திட்டங்களைக் கொண்டிருந்தபோதிலும், சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் வன்மை கட்டிட நிபுணர்கள் எதிர்பார்த்து திட்டமிட்டிருந்ததையும்விட அதிகமாகி விட்டிருந்தது என்று ஒரு அதிகாரி தெரிவிக்கிறார். அடிப்படை பிரச்னை யாதெனில் நில நடுக்கத்தின்போது “மென்மையான மண்” நடந்துகொண்ட விதமாகும். பொறியாளர்களும் கட்டிட திட்ட நிபுணர்களும் எதிப்பார்த்ததைவிட “பலவீனமான” மண்தானே பேரளவான நடுக்கத்தைக் கடத்தியது. கூடுதலாக, அந்தக் கட்டிடங்கள் எவ்வளவு நேர நடுக்கத்தைத் தாங்கிடவேண்டும் என்று திட்டமிடப்பட்டு கட்டப்பட்டதோ அதைவிட அதிக நேர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கங்களை முன்னறிவிக்க முடியாததையும், சிறந்த அறிவின் மத்தியில் அதன் பாதிப்புகளையும் குறித்து நிலநடுக்க பொறியாளர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “ஒருவர் தகுந்த கவனம் செலுத்தாவிட்டால், எந்தப் பொருளும் நிலநடுக்கத்திற்கு இறையாகும் என்பதை இது விளக்கிக் காட்டுகிறது.”
பார்வோனின் சாபமா?
1920-களில் பார்வோன் டுட்டான்க்ஹாமனின் கல்லறைக்குள் சென்ற 24 எகிப்திய தொல்பொருளாய்வாளர்கள் சற்று நேரத்திற்குள் இறந்துவிட்டனர். சொல்லப்பட்டதுபோல் அவர்கள் ஒரு சாபத்திற்கு இறையானவர்களா? இந்த அகால மரணத்திற்குக் காரணம் கொடுப்பவராக பிரான்ஸ் நாட்டு மருத்துவர், காரலின் ஸ்டங்கர் பிலிப் கூறியதை இன்டர்நேஷனல் ஹெரல்டு ட்ரிபியூன் அறிக்கை செய்தது. இதற்குக் காரணிகளாக இருந்தவை கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்த பழம் மற்றும் காய்கறிகள் போன்ற கரியச் சேர்மான வஸ்துக்களாகும். நூற்றாண்டுகளினூடே இந்தப் பொருட்கள்—“நித்தியத்திற்கான பயணத்தின்போது” பார்வோனுக்கு உணவாக இருப்பதற்கு வைக்கப்பட்ட இவை—அழுகி அதிக நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மான வஸ்துக்களை ஏற்படுத்தியது. இந்த வஸ்துக்களை சுவாசித்த அந்த விஞ்ஞானிகள் நச்சுத்தன்மைக்கு இறையானார்கள் என்றார் பிரான்ஸ் நாட்டு மருத்துவர்.
தகப்பன்மார்களுக்கு மரியாதை
ஜப்பானிய தகப்பன்மார்கள், தங்களுடைய தொழிலுக்குத் தாலி கட்டினவர்கள் என்றும் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்காதவர்கள் என்றும் வெகு காலமாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். இது அவர்களுடைய பிள்ளைகள் தங்கள் தந்தையருக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுக்காதபடி செய்துவிட்டதா? அசாஹி ஷிம்பன் என்ற டோக்கியோ தினசரி ஒன்று “நாங்கள் நினைத்ததைவிட எங்கள் தகப்பன்மார்கள் நல்ல நிலையிலிருக்கிறார்கள்,” என்ற தலையங்கத்தின் கீழ் “இரண்டு பிள்ளைகளில் ஒன்று [தங்கள் தந்தையை] ‘மதிக்க முடியும்’ என்கின்றனர்,” என்ற உபதலைப்பைக் கொண்டிருந்தது. 7-வது முதல் 12-வது வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பேரிலான ஒரு சுற்றாய்வு, 46.8 சதவிகித மாணவர்கள் தங்கள் தகப்பனாரிடம் தங்குதடையின்றி உறையாட முடிகிறது என்று காண்பித்தது. என்றபோதிலும், நிலைமை முன்னேறவேண்டிய நிலையிலிருக்கிறது, ஏனென்றால், ஒரே பாலினத்தவரில் 95.3 சதவிகிதத்தினரும் தங்கள் நண்பர்களிடம் பேசுகையில் அவ்விதமே உணர்ந்தனர். 17 சதவிகிதத்தினர் மட்டுமே தங்களுடைய பிரச்னைகளை தகப்பன்மார்களிடம் எடுத்துச்செல்வதாகக் கூறினர்.
கம்ப்யூட்டர் விளையாட்டு “ஜுரம்”
ஜப்பானில் எலக்ட்ரானிக் விளையாட்டு விளையாடுவோரின் எண்ணிக்கை சுமார் 2 கோடி என்று கணக்கிடப்படுகிறது. அவர்களில் பெரும்பான்மையினர் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் என்று அன்மையில் ஓசாக்காவில் நடந்த மாநாட்டில் கூறப்பட்டது. அசாஹி ஈவ்னிங் நியூஸ் என்ற தினசரியில் அறிக்கை செய்யப்பட்டதுபோல், “எலக்ட்ரானிக் விளையாட்டுகள் வீட்டில் டெலிவிஷனுடன் அல்லது கம்ப்யூட்டருடன் விளையாடுவதையே விரும்பும் சுறுசுறுப்பில் குறைந்த மாணவர்களையே உருவாக்கியிருக்கிறது.” உவாக்கயாமா ஆரம்பப்பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட சுற்றாய்வில் 38 மாணவர்கள் உட்பட்டிருந்தனர். அதில் 34 பேர் அப்படிப்பட்ட விளையாட்டுகளைத் தினந்தோறும் விளையாடினர். இவர்களில் 8 பேர் நாள்தோறம் நான்கு மணிநேரத்தை செலவழித்தனர். 19 பேர் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்தை கம்ப்யூட்டர் விளையாட்டுக்காக செலவழித்தனர்.
மண்புழு அருமருந்து
“மண்புழு வடிநீர்” மூலநோய்கள், சிறுநீரகக்கோளாறுகள், வயிற்றுப்புண், ஜுரம், ஆஸ்துமா, வீக்கங்கள், உடலில் நீர் தங்குதல் மற்றும் கடுமையான இரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்குப் பயனுள்ள மருந்தாக இருப்பதாய் சீன மருத்துவர்கள் கருதுகிறார்கள். என்றபோதிலும் ஷாங்ஹாய் லைட் தொழிற் கல்லூரியில் வேதியல் ஆசிரியராய்ப் பணிபுரியும் ஜி ஹெலி “எந்தவித நாற்றமும் மண்டியுமின்றி“ மண்புழு வடிநீரை எடுக்கும் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்திருக்கிறார் என்று நியு சயன்டிஸ்ட் அறிக்கை செய்கிறது. இந்தப் புதிய முறையில் தொழில் நிபுணர்களும் வியாபாரிகளும் அதிக ஆர்வத்தைக் காண்பித்திருக்கின்றனர். ஏன்? ஏனென்றால் மண்புழு தொழிலை விருத்தி செய்யும் சீனாவின் வாய்ப்புகளை இது பெருக்கியிருக்கிறது. “மண்புழு வடிநீர் ஒரு சத்துள்ள போஷாக்கு மிகுந்த பானம்,” என்று ஜி ஹெலி கூறுகிறார். “இது மதுபானங்களிலும், குளிர்பானங்களிலும் கேக்குகளிலும் சேர்க்கப்படலாம்.”
மதிப்பு மிகுந்த செய்திகள்
யெகோவாவின் சாட்சிகளில் இருவர் ப்ராங்க்ஃபர்ட்டில் திரு. குண்டர் R-ன் வீட்டு வாசலில் பைபிளைப் பற்றிப் பேசுவதற்காக நின்றுகொண்டிருந்தனர். “அவர் அதிக எரிச்சலடைந்தவராய், மரியாதையான ஆனால் தீர்மானமான வார்த்தைகளைச் சொல்லி இவர்களை அனுப்பிவிட்டு, கதவை மூடிவிட்டார்,” என்று ஜெர்மன் தினசரி ப்ராங்க்ஃபர்ட்டர் ருண்ட்ஷா கூறுகிறது. என்றபோதிலும், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் அவர் வாசலில் நின்றார்கள். இம்முறை பைபிளிலிருந்து நற்செய்தியை அறிவிப்பதற்காக வரவில்லை, ஆனால் வீட்டின் மேலறையிலிருந்து கசிந்த வாயுவைக் குறித்த கெட்ட செய்தியுடன் நின்றார்கள். இந்த இரண்டு சாட்சிகளும் குண்டரும் மேல்மாடிக்கு விரைந்தனர். குண்டர் மணியடிக்கச் சென்ற நிலையில் சாட்சிகள் அவரை “நிறுத்த முடிந்தது.” பின்பு தீ அணைப்புப் படையினர் உள்ளே வந்து முக்கியமான இடத்தில் வாயு கசிவதைக் கண்டுபிடித்தனர். “ஒரு காரியம் நிச்சயம், மணியடித்திருந்தால் ஒரு வெடிப்பே ஏற்பட்டிருக்கும்,” என்று அந்தத் தினசரி கூறினது. “சில ‘செய்திகள்’ உண்மையிலேயே மதிப்பு மிகுந்தவை,” என்றும் கூட்டினது.
ஜம்போ அச்சியந்திரம்
புதிய ஜப்பானிய முழுவண்ண ஜம்போ அச்சியந்திரத்தின் வருகையோடு உருளை அச்சுமுறை ஒரு “இராட்சத” அடியை எடுத்து வைத்திருக்கிறது. 14 டன்கள் எடை கொண்ட இந்த அச்சியந்திரம் 52 அடி நீளமும் 23 அடி அகலமும் (16 × 7 மீ) கொண்ட காகிதத்தைக் கையாளும்படி திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. கையால் செய்வதற்கு இரண்டு வராங்கள் எடுத்த பெரிய பெரிய அறிக்கைகளும் சுவரொட்டிகளும் இப்பொழுது ஒன்றரை மணி நேரத்தில் முடிக்கப்படுகின்றன. இது எப்படிச் செய்யப்படுகிறது? புகைப்படங்கள் அல்லது வரைப்படங்கள் ஒரு பத்திரிகையின் பக்க அளவுக்குப் படம்பிடிக்கப்பட்டு கம்ப்யூட்டரின் ‘ஞாபகத்தில்’ வைக்கப்படுகிறது. அதை இயக்குகிறவர் வார்த்தைகளை அல்லது எழுத்துக்களை அதன் மீது சேர்த்தல், வண்ணத்தை மாற்றுதல் போன்ற மற்ற மாற்றங்களையும் செய்திட முடியும். பின்பு அந்த 8 அடி (2.5 மீ) விட்டம் கொண்ட உருளை சுற்ற ஆரம்பிக்கையில் நான்கு வண்ணமிடும் ஜெட்களும் இயங்க ஆரம்பிக்கின்றன. இந்தப் புதிய அச்சியந்திரம் கொண்டு சுவர் விரிப்புகளும் சுவரொட்டிகளும் அச்சிடப்படலாம் என்று ஏஷ்யா வீக் அறிக்கை செய்கிறது. (g86 6/8)