உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 1/8 பக். 21
  • வால் நட்சத்திர மோதல்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வால் நட்சத்திர மோதல்!
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • கிரகங்களுக்கு அப்பால் இருப்பதென்ன?
    விழித்தெழு!—1999
  • எரி நட்சத்திரங்கள் எங்கிருந்து வருகின்றன?
    விழித்தெழு!—1993
  • குறுங்கோள்கள், வால்நட்சத்திரங்கள், பூமி—மோதிக் கொள்ளும் பாதையில்?
    விழித்தெழு!—1999
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 1/8 பக். 21

வால் நட்சத்திர மோதல்!

ஜூலை 1994-ல், ஒரு வாரமாக, ஷூ மேக்கர்-லெவி 9 என்ற வால் நட்சத்திரத்தின் சுமார் 20 துண்டுகள் வியாழன் கோளில் மோதின. அவ்வாறு மோதியதானது, உலக முழுவதிலும் நட்சத்திரத்தை உற்றுநோக்கி ஆராய்வோரின் கவனத்தைக் கவர்ந்தது. வால் நட்சத்திரத்தைப் பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஏனெனில் “இந் நூற்றாண்டின் கருத்தைக் கவரும் வான் சார்ந்த நிகழ்ச்சி இதுவே” என்று அந்தத் தோற்றத்தை ஒரு வானவியல் வல்லுநர் கூறினதுபோல ஆனது. இந் நிகழ்ச்சி எதிர்பார்ப்புகளையும் மிஞ்சிவிட்டது ஏன்?

முதலில், மணிக்கு சுமார் 2,00,000 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற இந்த வால் நட்சத்திரத் துண்டுகள் பயங்கரமான வெடிப்பை ஏற்படுத்தின. சாதாரண கணிப்பைவிட மிஞ்சின கணிப்புகள் மட்டுமே அதைக் குறிப்பிட்டுக் காட்டியிருந்தன. வியாழனின் வளிமண்டலத்தில் அவை நுழைந்ததானது, பகட்டான ஒளிவீசும்படி செய்தது. அந்தப் பகட்டு ஒளி, ஒருசில வினாடி மட்டுமே நிலைத்திருந்தது. பிறகு, மிகுதியாய் சூடாக்கப்பட்ட வாயுக்கள் வளிமண்டலத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. அவை பெரியளவில் நெருப்புப் பந்துகளை உருவாக்கின. அவற்றுள் மிகப் பெரிய வெடிப்பினால் ஏற்பட்ட நெருப்புப் பந்தின் வெப்பநிலை சிறிது நேரத்திற்கு, சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையைவிடவும் அதிகமாய் இருந்தது! அடுத்த 10 முதல் 20 நிமிடங்களுக்கு, ஒரு பெரிய ஒளிக்கற்றை கிட்டத்தட்ட 3,200 கிலோமீட்டர் உயரம்வரை எழும்பியது.

மேலும், பார்ப்பதற்கான சூழ்நிலைகள் சாதகமற்ற வகையில் இருந்ததாக ஆரம்பத்தில் எண்ணப்பட்டவை, கிட்டத்தட்ட மிகச் சிறந்தவையாய் மாறின. வியாழனின் இருண்ட பகுதியில் மோதல்கள் ஏற்பட்டதால், வெளிச்சமான பகட்டு ஒளிகளும் ஒளிக்கற்றைகளும் எளிதில் கண்டுகொள்ளப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் அந்த ஒளிக்கற்றைகளின் தலைப்பகுதிகள், வியாழனின் தொடுவானத்துக்கும் மேல் எழும்பினதைக் காணமுடிந்தது. பிறகு பத்து நிமிட மோதல்களுக்குள், வியாழனின் சுழற்சி, மோதல் ஏற்பட்ட இடங்களை, பூமியை நேராகப் பார்க்கும்படியாகக் கொண்டுவந்தது. மற்றொரு பத்து நிமிடத்திற்குள் மோதல் ஏற்பட்ட இடங்கள் சூரிய ஒளிக்குள் வந்தன. அதற்குள், அந்த ஒளிக்கற்றைகள் கரைந்துவிட்டன. அவற்றின் இடத்தில் மிகப்பெரிய, இருண்ட புள்ளிகள் காணப்பட்டன. இப்புள்ளிகள்—அவற்றுள் மிகப்பெரியது, பூமியைப்போல் இரு மடங்கானது—வானவியல் வல்லுநர்களால் கணிக்கப்பட முடியாமல் இருந்தது. ஆனாலும், அவை மிகத் தெளிவாகக் காண முடிந்த அம்சங்களாய் ஆயின.

கலிலியோ விண்வெளிக் கப்பல், மோதல்களை நேரடியாகவே காட்டியது. பூமி சுழலும் வட்டப்பாதையில், ஹபிள் விண்வெளி தொலைநோக்கி, கட்புலன் ஒளி மற்றும் புறஊதா ஒளியின் அலைநீளங்களில் இந்த மோதல்களைப் பதிவு செய்தது. மதிப்புவாய்ந்த தகவலைப் பெறுவதற்காக, பிற வானவியல் ஆராய்ச்சி நிலையங்கள், குறிப்பாய்த் தெரிந்தெடுக்கப்பட்ட வெவ்வேறு அலைநீளங்களில் வால் நட்சத்திர மோதல்களின் பிரதிபலிப்பை மதிப்பிட்டன. தென் துருவத்தில், தொடர்ந்து இருட்டாய் இருந்தது. அது, நாள் முழுதும் தென் துருவ அகச்சிவப்பு ஆய்வுப்பயண தொலைநோக்கி மூலம் பார்ப்பதை அனுமதித்தது.

வானைப் பார்ப்போர் ஓர் அரிய நிகழ்ச்சியை அனுபவித்தனர். அடுத்த வால் நட்சத்திரக் காட்சி எப்பொழுது நடைபெறும்? ஏற்கெனவே சாதாரண கண்களால் காண முடிந்ததாய், ஹேல்-பாப் வால் நட்சத்திரம், நாம் இந்நூற்றாண்டில் காணும் மிகப் பிரகாசமான வால் நட்சத்திரமாய் இருக்கலாம். அது நம் கிரகத்தில் 19.8 கோடி கிலோமீட்டர் தூரத்திற்குள் கடந்து செல்லும். வட கோளார்த்தத்தில் வால் நட்சத்திரத்தைப் பார்ப்போர், ஹேல்-பாப் வால் நட்சத்திரத்தை ஏப்ரல் 1997-ன்போது காண விரும்புவர். இவையெல்லாம், “சோதிகளின் பிதாவாகிய” யெகோவாவால் படைக்கப்பட்ட சக்திவாய்ந்த, மாறும் தன்மையுடைய அண்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றன.—யாக்கோபு 1:17; சங்கீதம் 115:16.

[பக்கம் 21-ன் படம்]

வியாழனுக்குள் வால் நட்சத்திரத் துண்டுகள் மோதின பகுதிகளைக் கரும்புள்ளிகள் காட்டுகின்றன

[படத்திற்கான நன்றி]

Hubble Space Telescope Comet Team and NASA

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்