வன்முறை நீங்கள் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்
பிரிட்டனின் உள்துறை அலுவலகம் சமீபத்தில் சிறைச்சாலை சேவைக்கு “கட்டுப்பாடும் தடைவரம்பும்” என்றழைக்கப்படும் ஒரு புதிய முறை பயிற்சியை ஆரம்பித்தது. இப்பயிற்சி மூன்று தலைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
▪குழுவாக வேலை செய்து ஒரு ஆளைக் கட்டுப்படுத்தி தடைசெய்வது
▪தனிமையாக இருக்கும் பணியாளர்கள் வேலைமுடிந்து வீடு செல்வதற்கு தனிச் செயல்முறை
▪கலகம் போன்ற பலர் ஒன்று சேர்ந்து திட்டமிட்ட ஆக்ரமிப்பு சண்டையை கையாளுதல்
“வலியத்தாக்கும் ஆயுதமற்ற சண்டை முறையாக இருக்கும் நோக்கத்தோடு இந்தப் பயிற்சி ஆரம்பிக்கப்படவில்லை” என்று உள்நாட்டு அலுவலக பிரதிநிதி ஒருவர் விளக்குகிறார். “ஒரு நிலையை கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் மற்ற எல்லாத் தெரிந்தெடுப்புகளும், முறைகளும் முதலில் முயற்சி செய்ய வேண்டும்.” வேறு வகையில் சொன்னால்: நேருக்கு நேர் எதிர்ப்படுவதை தவிருங்கள்! இப்பேர்ப்பட்ட சிந்தனை எவ்வளவு செல்லுபடியானதாக இருக்கிறது?
தற்காப்பு பற்றியதென்ன?
போருக்குரிய கலைகள் அடிக்கடி ஆதரித்து பேசப்பட்டாலும், குற்றவாளிகளுக்கு எதிராக தற்காப்பில் அவைகளின் உபயோகம் அநேக ஆட்களுக்கு தெரிந்தெடுக்கக்கூடிய விருப்பமாக ஆதரிக்கப்படுவதில்லை. வன்முறை—கவனிக்கக்கூடிய வாழ்க்கைத் தொழில்களுக்கு ஒரு வழிகாட்டி என்ற பிரசுரம் விளக்குகிறது:
“சிக்கலான தற்காப்பு திறமைகளை கற்பிப்பதற்கு பொதுவாக சிறிது ஆதரவே இருந்திருக்கிறது, பயிற்சியின் முக்கிய குறிக்கோள் தவிர்ப்பதற்காக என்று மட்டும் இல்லாமல் அடிக்கடி அவைகளின் நடைமுறையற்ற தன்மையால் . . . மேலுமாக அப்பேர்ப்பட்ட செயற்படு முறைகளை பயன்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். சூழப்பட்ட, நெரிச்சலான இடங்கள் போன்ற அமைப்புகளில் பயிற்சி எடுப்பவருக்கு உண்மை வாழ்க்கையில் தாக்கப்படும்போது ஏற்படுவதைவிட அதிகமான தீங்கும், காயமும் பயிற்சியின்போது விளைவிக்கக்கூடும்.”
தற்காப்பு செயல்படும் நிலையில் என்ற புத்தகத்தில் பிரிட்டிஷ் ஜியு ஜிட்சு சங்கத்தின் தேசிய பயிற்சி ஆசிரியர் ராபர்ட் கிளார்க் இன்னுமதிகம் சொல்கிறார்: “முதன் முதலாக கற்றுக்கொள்ளும் எல்லாக் காரியங்களும்போல, செயல் நிறைவேற்றம் இயல்பாக ஆவதற்கு, உணர்வுள்ள சிந்தனையோடில்லாமல் செயல் நிறைவேற்றம் செய்யப்பட [போருக்குரிய கலைகள்] பெரிதளவான ஆரம்ப முயற்சியை தேவைப்படுத்தும். நீங்கள் தாக்கப்படுகையில், எந்தச் செயல் எதைத் தொடரும் என்பதை சிந்திப்பதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது.”
1986-ல் லண்டனில் தன் தனிப்பட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது விளக்கமுடியாத வண்ணம் மறைந்துபோன 25 வயது பெண்மணியின் நினைவாக நிறுவப்பட்ட சூசி லாம்ப்லக் டிரஸ்ட் என்ற அற நிலையம் அதே போன்று தற்காப்பு தாக்குதலை ஒரு கடைசி நிலையாக மட்டுமே சிபாரிசு செய்கிறது.
எதிர்பாரா வன்முறை செயலை எதிர்ப்பதற்கு போருக்குரிய கலைகள் ஒரு விடையாக இல்லாவிடில், வேறு என்ன இருக்கிறது?
பின்னிருந்து தாக்குபவர்களோடு எதிர்த்துச் சமாளித்தல்
பின்னிருந்து தாக்குபவர்களை எதிர்த்துச் சமாளிப்பதற்கு முக்கியமான ஒன்று, உங்களைத் தாக்கப்படும்படியான நிலையில் வைத்திருப்பதை தவிருங்கள். இங்கிலாந்து, லீட்ஸில் உள்ள ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டார்: “பின்னிருந்து தாக்குதல் வாய்ப்பை பயன்படுத்துவோரின் வேலை, இந்தக் காரியத்தை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.” ஆகையால் சூழ்நிலைகள் உங்களை ஒரு பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதற்கு கட்டாயப்படுத்தினால், விழிப்புள்ளவர்களாயிருங்கள். பின்னிருந்து தாக்குபவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்காதீர்கள். பைபிள் நியமத்திற்கு ஏற்றவாறு செயல்படுங்கள்: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப் போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.”—நீதிமொழிகள் 22:3.
எதிரேயிருக்கும் தெருவில் உங்கள் பார்வையை செலுத்திக் கொண்டிருங்கள். மேலும் இடையிடையே பின்னால் திரும்பிப் பாருங்கள். ஒரு குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் எதிரே பாருங்கள்—ஆபத்தை எதிர்பாருங்கள். இருளடைந்த பிறகு தனியே பயணம் செய்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். கூட்டத்திற்காக ஓர் இடத்தில் நீங்கள் இருந்தீர்களேயானால், ஒரு நண்பரோடு வீட்டுக்கு நடந்துசெல்ல காத்திருங்கள். உங்கள் வாகனங்களை ஓட்டுகையில், எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்டிருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படியில்லையென்றால், சிக்னல் விளக்குக்கு முன் நீங்கள் நிறுத்துகையில் ஒரு குற்றவாளி எளிதாக நுழைந்துவிடலாம்.
நீங்கள் முன்னெச்சரிக்கையாயிருந்தபோதிலும், யாரோ ஒருவர் கத்தியோ அல்லது துப்பாக்கியோ வைத்துக்கொண்டு திடீரென முக—முகமாக வந்தால் என்ன செய்வீர்கள்? ஞாபகத்தில் வையுங்கள்: உங்கள் ஜீவன் உங்களுக்கு அதிகமுக்கியமானது. அதன் மதிப்பை எந்த உடைமையும் கடந்துவிட முடியாது. ஆகையால் உங்களைத் தாக்குபவர் பணம் கேட்டால், அவருக்கு கொடுத்துவிடுங்கள். அபாயகரமான இடங்களில் வாழும் சில ஜனங்கள் ‘தாக்குபவர்களுக்கு பணம்’, அதாவது தாக்குபவரை திருப்தி செய்வதற்காக பணப்பையில் கொஞ்சம் பணம் எடுத்துச் செல்கின்றனர்.
இதையும் ஞாபகத்தில் வையுங்கள்: அமைதியாக செயல்படுங்கள். உறுதியுடனும், உங்கள் இயல்பான குரலோடும் பேசுங்கள். கண்களில் நேராக அவனை பாருங்கள். மேலும் அவன் உங்களை பார்க்கும்படி செய்ய முயற்சி செய்யுங்கள். அவனுடைய பழித்துரை அல்லது பயமுறுத்தலுக்கோ பதிலுக்கு பதில் சொல்லாதீர்கள். பைபிள் புத்திமதியை பொருத்துங்கள்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்.” ‘எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனுமாயிருக்க வேண்டும்.’ (நீதிமொழிகள் 15:1; 2 தீமோத்தேயு 2:24) மன்னிப்பு கேட்பதற்கு உண்மையில் எதுவுமில்லையென்றாலும், மன்னிப்பு கேட்க தயாராயிருங்கள்.
கற்பழிப்பும் வீட்டு பாதுகாப்பும்
“ஒரு பெண்ணை கற்பழிப்பது எவ்வளவு எளிதானது என்பதைக் கண்டு அநேக கற்பழிப்பவர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர்” என்று பெண்கள், ஆண்கள் மற்றும் கற்பழிப்பு என்ற புத்தகத்தில் ரே வயர் என்பவர் எழுதுகிறார். “அவளது திகிலடைந்த செயலற்ற நிலைமை, எதிர்ப்பின்மை என்பதாக விளங்கிக் கொள்ளப்பட்டு அது தொடர்ந்து தாக்குவதற்கு தீங்கு செய்பவரின் சாக்காக ஆகிவிடுகிறது.” ஆகையால் எதிர்ப்பு உணர்ச்சியின்றி ஒருபோதும் இருந்து விடாதீர்கள்! நீங்கள் கீழ்ப்படியப் போவதில்லை என்பதை தெளிவாக்குங்கள். பாலுறவு கொள்வதை தவிர்ப்பதற்கு உங்களிடத்தில் உள்ள எந்த முறையையும் நீங்கள் உபயோகிக்கலாம். நீங்கள் ஒரு பலமான சண்டை போடுகிறவராக இல்லாவிடினும், உங்களிடத்தில் ஒரு வல்லமை வாய்ந்த ஆயுதம் இருக்கிறது—உங்கள் குரல்.
உங்களால் எவ்வளவு சப்தமாக கூச்சலிட முடியுமோ அவ்வளவாக சப்தமிடுங்கள். அது பைபிள் ஆலோசனைக்கு ஒத்ததாய் இருக்கிறது. (உபாகமம் 22:23-27) ஒரு பருவ வயதினள் ஒதுக்கப்பட்ட பூங்காவிற்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது, கடினமாக கூச்சலிட்டு எதிர்த்தாள். இது அவளைத் தாக்கியவனை அவ்வளவாக திடுக்கிடச் செய்ததினால் அவன் ஓடிப்போய்விட்டான். கூச்சலிடுதல் உங்களைத் தாக்குபவனை நரம்பாற்றல் இழக்கச் செய்யலாம். இவ்வாறாக நீங்கள் ஒருவேளை தப்பியோட உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கலாம் அல்லது இது மற்றவர்களை விழிப்பாக்கி, உங்களுடைய உதவிக்கு அவர்கள் வரும்படி செய்யலாம்.a
பிரிட்டனில் அநேக கற்பழிப்புகள் வீட்டிற்குள் நிகழ்கின்றன, தாக்கப்படும் பெண்ணின் வீட்டிலேயே இது அடிக்கடி நடக்கிறது. அதிகரித்துக்கொண்டே போகும் இந்தத் தாக்குதல்கள் வீடு புகுந்து திருடுகையில் நிகழ்கிறது. ஆகையால், கூடுமானவரை உங்கள் வீடு பாதுகாப்பானதாக இருக்க உறுதிப்படுத்திக் கொள்வது அர்த்தமுள்ளது. இதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம்?
உள்ளே வருவதற்கு சாத்தியமான எல்லா வழிகளையும் உறுதியான ஜன்னல் தாழ்ப்பாள்களையும், கதவுகளுக்கு உறுதியான பூட்டுகளையும் கொண்டு நீங்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும். கதவின் பூட்டு, நீங்கள் வெளியேசெல்லும்போது தாழ்ப்பாளைத் திருப்பி பூட்டுவதற்கு உங்களுடைய சாவியை கட்டாயம் உபயோகிக்க வேண்டிய ஒன்றாகவும், உள்ளே இருக்கும்போதும் தாழ்ப்பாளைத் திறப்பதற்கு சாவி தேவைப்படும் ஒன்றாகவும் இருக்கவேண்டும். கூடுதலாக, ஒரு கதவு சங்கிலியை வாங்குவது ஞானமானதாக இருக்கும். ஆனால் ஞாபகத்தில் வையுங்கள், கதவு சட்டம் மற்றும் அந்தச் சங்கிலி பொருத்தப்பட்டிருக்கும் ஆணிகள் பலமாக இருந்தால்தான் அப்பேர்ப்பட்ட கருவி உறுதியாக இருக்கும்.
மற்றொரு ஞானமான முன்யோசனை, வீட்டுக்கு வருபவர்கள் எல்லாருடைய நம்பிக்கையூட்டுவதற்குரிய ஆதாரச் சான்றையும் சரிபார்ப்பது. அவர்களுடைய அடையாள அட்டைகளுக்காக கேளுங்கள்.
வன்முறை குறைந்து போய்க் கொண்டில்லை. உண்மையில், உலக முழுவதிலுமிருந்து வந்துள்ள புள்ளிவிவரங்கள் இது அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது என்று காட்டுகிறது. நம்மையும், நமக்கு அன்பானவர்களையும் பாதுகாக்க நம்மால் இப்பொழுது என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வது விவேகமானதாக இருக்கும், ஆனால் அது பிரச்னையை முழுவதுமாக தீர்ப்பதில்லை.
இந்தப் பிரச்னைக்கும் மற்ற எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வைக் காண மனிதர்கள் நிச்சயமாகவே தங்களுடைய சிருஷ்டிகரை நோக்கியிருக்க வேண்டும். நீதியான பரலோக அரசாங்கமாகிய அவருடைய ராஜ்யமே இவற்றிற்கு அவருடைய விடையாக இருக்கிறது.
பூமியிலுள்ள எல்லா அநீதியான காரியங்களையும் கடவுளுடைய ராஜ்யம் நீக்கிவிடும். அப்பொழுது பயப்படுவதற்கோ, எந்தத் தெருவில் நடப்பதற்கோ அல்லது இரவில் எந்தப் பூங்காவில் நுழைவதற்கோ பயப்பட அவசியமில்லை. உங்கள் கதவுகளை பூட்டவோ, உங்களுடைய தற்காப்பைக் குறித்து கவலைப்படவோ தேவையிருக்காது.—2 பேதுரு 3:13.
வன்முறையற்ற இப்படிப்பட்ட புதிய உலகில் வாழ நீங்கள் விரும்புகிறீர்களா? இது நம்முடைய சிருஷ்டிகரின் உறுதியான வார்த்தையை அடிப்படையாக கொண்டிருப்பதால் உங்களுடைய சந்தோஷமான எதிர்பார்ப்பாக இருக்கக்கூடும். நம்முடைய சிருஷ்டிகர் நம் எல்லாருக்காகவும் அளிக்கும் இந்தச் சிறந்த எதிர்பார்ப்பை நீங்கள் புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவிசெய்ய சந்தோஷமுள்ளவர்களாக இருப்பார்கள். இதைத் தெரிந்துகொள்ள நீங்களே முன்வந்து ஏன் முயற்சி செய்யக்கூடது? சீக்கிரத்தில் வன்முறை முடிவடையும் என்பதை தெரிந்துகொள்வதில் நீங்களும்கூட மகிழ்ச்சியடைவீர்கள்! (g89 4⁄22)
[அடிக்குறிப்புகள்]
a கற்பழிப்பைப் பற்றிய விவரமான கலந்தாலோசிப்புகளுக்கு, விழித்தெழு! இதழ்கள் மே 22, 1986, பிப்ரவரி 22, 1984, ஜூலை 8, 1980 ஆகியவற்றைப் பாருங்கள்.
[பக்கம் 19-ன் பெட்டி]
நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள்
▪ உங்கள் பணத்தை திட்டமிடுங்கள், விசேஷமாக இரவுகளில் வெளிச்சமில்லா சாலைகளையும், ஆள் நடமாட்டமற்ற தெருக்களையும் தவிருங்கள். உயரமான, குதிங்கால் காலணிகளைவிட தட்டையான காலணிகளில் நீங்கள் விரைவாக ஓடலாம் என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள்.
▪ தெரியாதவரின் வாகனத்தில் ஒருபோதும் ஏறிக்கொள்ளாதீர்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் கவர்ச்சிக்கப்பட்டு உங்கள் வாகனத்திலிருந்து வெளியே வராதீர்கள். எந்தப் பழுதுபார்த்தலும் நீங்கள் அறிந்தவரால் சிறந்த விதத்திலும் பாதுகாப்பான இடத்திலும் செய்யப்படவேண்டும், சாலை ஓரங்களில் இருக்கும் நீங்கள் அறியாதவர்கள் மூலம் அல்ல.
▪ நடை பாதை ஓரத்தின் அருகில் நடவுங்கள், வாசல் அல்லது சந்தில் பதுங்கியிருந்து ஒருவன் உங்களைத் தாக்கக்கூடும். ஆதலால் கட்டிடங்களிலிருந்து தூரம் தள்ளி நடவுங்கள்.
▪ சந்தேகமான ஆட்களின் கூட்டத்தை நீங்கள் பார்த்தால், அவர்களை தவிர்ப்பதற்காக தெருவை கடந்து செல்லுங்கள் அல்லது திசையை மாற்றுங்கள். உங்களை யாராவது பின்தொடர்ந்தால் தெருவிற்குள் செல்லுங்கள். அபாயம் உடனடியாக நிகழப்போவதாக தெரிந்தால் ஓடுங்கள் அல்லது உதவிக்காக கூப்பிடுங்கள்.
▪ உங்கள் கையில் கிறீச்சொலி கடிகாரம் வைத்திருங்கள், உங்கள் பணப்பையில் அல்ல. சப்தம் தாக்கப்போகிறவன் உங்களை விட்டு போகும்படி செய்யக்கூடும்.
▪ லிப்டில் உள்ளவர்களிடமிருந்து அபாயத்தை எதிர்பார்த்தால், அதற்குள் நுழைவதை தவிருங்கள். லிப்டில் இருக்கையில் கட்டுப்பாடு முகப்புக் கூறுக்கு அருகே நில்லுங்கள். சந்தேகத்திற்குரிய ஆள் உள்ளே வந்தால், வெளியேறுவது ஞானமானது.
▪ கடன்மதிப்பு அட்டைகளையும் மற்ற மதிப்பு வாய்ந்த பொருட்களையும் உங்களோடு ஒரு வித்தியாசமான இடத்தில் வையுங்கள். இந்த விதத்தில் உங்கள் பணப்பை பறித்துக்கொள்ளப்பட்டாலும் உங்களுக்கு நஷ்டம் பெரிதாக இருக்காது.
[பக்கம் 20-ன் படம்]
உங்கள் பணத்தை காத்துக்கொள்ள போராடி ஒருவேளை உயிரையே இழந்துவிடுவீர்களா?
[பக்கம் 20-ன் படம்]
பாலுறவுக்காக தாக்கப்பட்டால், ஒரு பெண் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் கூச்சலிடுதல்
[பக்கம் 21-ன் படம்]
நல்ல தரமான பூட்டுகள் உங்கள் வீட்டை பாதுகாப்பாக வைக்க அத்தியாவசியமானவை
[பக்கம் 21-ன் படம்]
எவரையும் வீட்டிற்குள் அனுமதிக்கும் முன் அவர் யார் என்பதைக் காட்டும் ஆதாரச் சான்றை சரிபாருங்கள்