உலகத்தைக் கவனித்தல்
பொறாமையுள்ள தேவதையா?
வட ஜப்பானில் ஒரு சுரங்கவழி கட்டிமுடிக்கப்பட்டதைக் குறிப்பதற்கு வைக்கப்பட்ட சமீப சடங்குகளுக்கு, பத்திரிக்கைத்துறை வரவழைக்கப்பட்டபோதிலும், ஒரு பெண் நிருபர் வருவதைத் தடுத்தனர், அந்தத் திட்டத்தின் உதவிமேற்பார்வையாளர் பின்வருமாறு விளக்கினார்: “ஒரு துர் அதிஷ்டம் உள்ளது. இந்த மலையின் தெய்வம் ஒரு ஒரு பெண்ணாக இருப்பதால், மற்றப் பெண்கள் இந்த இடத்துக்குள் பிரவேசித்தால் அவள் கோபமடைந்து விபத்துக்கள் ஏற்பட செய்வாள். ஒரு பெண் உள்ளே வந்தால் தோண்டுவதற்கு இன்னும் மீந்திருப்பதைத் தாங்கள் தொடர்ந்து செய்யமாட்டார்களென ஆண்கள் சொல்லுகின்றனர்.” பெண்கள் தீட்டுள்ளவர்கள் என்ற பால்சம்பந்த தப்பெண்ணங்கொண்டவர்களின் நம்பிக்கையின்பேரில் இந்தப் புராண எண்ணம் ஆதாரங்கொண்டுள்ளதென்று, வெறுப்புற்ற ஆண் உளநூல் வல்லுநர் ஒருவர் கூறினார். இந்தப் பழக்கம் “வேறுபாடு காட்டுவதாய்” இருக்கிறபோதிலும் “கட்டிட வேலையாளர்களின் உணர்ச்சிகளை புறக்கணித்துவிடக்கூடாது” என்ற கட்டிட ஊழிய அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டார்.
தடங்கலற்று-விழும் கோபுரம்
விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியை புவி ஈர்ப்புவிசை தடங்கள் இல்லாத சூழ்நிலைகளில் நடத்தும்படி அடிக்கடி தேவைப்படுகிறது ஆனால் அவ்வாறு செய்ய வானவெளிக்குச் செல்ல அவர்கள் பணம் செலவிடமுடியாது: ஆகவே, தடங்கலற்று விழும் நிலையிலுள்ள பொருட்களை கூர்ந்து கவனிப்பதற்கு விஞ்ஞானிகள் அனுமதிக்கும் ஒரு தனி தன்மைவாய்ந்த கோபுரம் ஜெர்மனியின் பிரெமெனில் கட்டப்பட்டுள்ளது, இந்தக் கோபுரம் 146 மீட்டர்கள் உயரமுள்ளதாய் நிற்கிறது. 110 மீட்டர் உயரமும் 35 மீட்டர் அகலமும் உள்ள ஒரு குழாய் அடங்கியது அந்தக் குழாய்க்குள் வைத்துள்ள 2 மீட்டர் நீள கடகத்தில் வைக்கப்படும் பொருட்கள் தடையின்றி மணிக்கு 167 கிலோமீட்டர்கள் வேகத்தில் கீழிறங்க 474 வினாடிகள் செலவிடுகின்றன. அந்த வீழ்ச்சியின்போது உய்த்துணர உதவும் குறிப்புகளைச் சேகரிக்கப் பயன்படுத்தும் கருவிகளுக்குள் ஒரு வினாடிக்கு 6,000 படங்களை எடுக்கும் ஒரு நிழற்படக் கருவி உள்ளது.
பிரிட்டிஷ் பொறியமைப்புகள்
பிரிட்டனில் 3,78,000 கார்கள் திருடப்பட்டதற்குக் காப்புறுதிக் கட்டணக்கோரிக்கை சென்ற ஆண்டில் 500 டாலர் தொகைக்கு வந்தது. திருடர்களைப் பிடிப்பதற்கு காவல் துறையினர் இப்பொழுது தனிமுறையான நிலைமாற்றப்பட்ட கார்களைப் பல பகுதிகளில் பயன்படுகின்றனர், இவை பொதுவாய் எலிப்-பொறிகள் என அழைக்கப்படுகின்றன. மாற்றியமைக்க ஒவ்வொன்றும் 1,800 டாலர்களுக்குக் குறையாத செலவாகும் இந்த ஊர்திகள், அவற்றை திருடி ஓட்டிச் செல்லும்படி திருடர்களைக் கவர்ந்திழுப்பதற்கு அவற்றின் தொடக்க இயக்குவிப்புத் துளையில் சாவிகள் தொங்க விடப்படுகின்றன. ஆனால் இந்தக் கார்களில் ஒன்று ஏறக்குறைய 15 மீட்டர்கள் ஓடியவுடன், அதன் இயந்திரம் ஓடுவது தடைப்பட்டு நின்றுவிடுகிறது, கதவுகள் பூட்டப்படுகின்றனர். உடைக்கமுடியாத கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பலகணிகள் திறக்கமுடியாமற்போகின்றன. அதே சமயத்தில், ரேடியோ அபாய அறிவிப்பொலிகள் காவற்துறையாளர்களுக்கு எச்சரிப்பு தருகின்றன, கார் ஓட்டுபவனைக் கைதுசெய்ய இவர்கள் சீக்கிரத்தில் அங்கு வந்து சேருகின்றனர். சமுதாய உரிமைகளுக்குரிய தேசீய ஆலோசனை சபை இந்த நடவடிக்கைகளின்பேரில் சிறிது கவலையைத் தெரிவித்தது. ஆனால் தேசீய குற்றச் செயல் தடைசெய்யும் நிறுவன உள்துறை பணிமனையின் மேலாளர், இந்தத் தானாகப் பூட்டிக்கொள்ளும் ஊர்திகள் “கார் திருடுவோருக்கு எதிரான போரில் பெருமதிப்பு வாய்ந்த ஒரு போர்க்கருவி,” என்று சொன்னாரென லண்டனில் தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள் அறிவிக்கிறது.
அமில மழையிலிருந்து மீளுதல்
கனேடிய உயிர்நூல் அறிஞர்கள் சொல்லுகிறபடி, உலகமுழுவதிலும் நன்னீர் ஏரிகளின் அமில மழை உண்டுபண்ணின அந்த ஏரியின் தண்ணீர்களைத் தூய்மைக்கேடு செய்ய தொடங்கினதுபோல், இவர்கள் ஒன்டாரியா, கானடாவிலுள்ள உவைட்பைன் ஏரியில் தங்கள் பத்தாண்டு ஆராய்ச்சியைத் தொடங்கினர், அந்தத் தண்ணீரின் அமிலத் தன்மை அதிகரித்தபோது அந்த ஏரியிலிருந்து நன்னீர் மீன்வகைகள் பலவும் மற்ற வகைகளான மீன்களும் குறையத் தொடங்கின. எனினும் அந்தத் தூய்மைக்கேடு நிறுத்தப்பட்டு அந்த ஏரியின் அமிலத்தன்மை ஏறக்குறைய இயல்பான நிலைக்குத் திரும்பின ஆறு ஆண்டுகளுக்குப் பின் முதலில் இருந்த நன்னீர் மீன்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டுபாகங்கள் திரும்பத் தோன்றின, மேலும் இவையும் மற்ற நீர்வாழ் உயிரின வகைகளும் தொடர்ந்து பெருகிக்கொண்டிருந்தன. ஆகையால் அமில மழையால் கெடுக்கப்பட்ட சில ஏரிகளாவது மனிதத்தலையிடுதல் இல்லாமலே இயல்பாக அதன் இயல்நிலைக்குத் திரும்ப மாறக்கூடுமெனத் தோன்றுகிறது—அந்தத் தூய்மைக்கேட்டுக்குரிய மூலகாரணத்தை நீக்கினான் மாத்திரமே அவ்வாறாகும்.
அலைந்து திரியும் தீவு
ஏறக்குறைய 154 கிலோமீட்டர்கள் நீளமும் 35 கிலோமீட்டர்கள் அகலமும் 230 மீட்டர்கள் கனமும் உள்ள ஒரு பெரிய தீவு, சமுத்திரத்தில் மிதந்துகொண்டிருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். விஞ்ஞானிகள் B-9 என பெயரிட்ட மிதக்கும் பனிப்பாறை அத்தகையதாக இருந்தது இது 1987-ல் அண்டார்க்டிக் (தென்துருவ) ராஸ் பனிப்பாறையிலிருந்து தகர்ந்துவந்தது. வானவெளி விமானக்கோனங்களே இந்த B-9- முதலாவது கண்டன பின்னால் விஞ்ஞானிகள் இதன் பரப்பின் மீது விழச் செய்த ஒரு ரேடியோ ஒலிக்கருவியைக் கொண்டு அதன் இயக்கங்களைக் கவனித்து வந்தனர். தான் தகர்ந்து விலகி, அண்டார்க்டிக்காவின் பிரசித்திப்பெற்ற புவியியல் சார்ந்த ஒரு பகுதியாகிய திமிங்கில வளைகுடாவை தடம் இல்லாமற் போகச் செய்ததுமுதற்கொண்டு B-9 ஏறக்குறைய 2,000 கிலோமீட்டர்கள் பயணப்பட்டுள்ளது. அது போகும் போக்கில், எது மூன்று மிகப்பெரும் துண்டுகளாக உடைந்துவிட்டிருக்கிறது. மேலும் அண்டார்க்டிக்காவைச் சுற்றியுள்ள சிக்கல் வாய்ந்த மற்றும் அளவிடக் கடினமான சமுத்திர நீரோட்டங்களைப்பற்றி அதிகத்தை விஞ்ஞானிகளுக்குக் கற்பித்துள்ளது. முழுமையாக அது 1,196 கனசதுர கிலோமீட்டர்கள் அளவான உறைந்த நன்னீரைக் கொண்டிருந்தது-ஒரு மதிப்பீட்டின்படி, பூமியிலுள்ள ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு நாளும் இரண்டு குவளைகள் தண்ணீர் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு அளிப்பதற்குப் போதியது. (g91 2/22)