உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

லேவியராகமம் முக்கியக் குறிப்புகள்

      • சமாதான பலி (1-17)

        • கொழுப்பையும் இரத்தத்தையும் சாப்பிடக் கூடாது (17)

லேவியராகமம் 3:1

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நல்லுறவு.”

இணைவசனங்கள்

  • +லேவி 22:21; எண் 6:13, 14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2000, பக். 15-16

    “வேதாகமம் முழுவதும்”, பக். 27

லேவியராகமம் 3:3

இணைவசனங்கள்

  • +லேவி 7:29-31
  • +யாத் 29:13; லேவி 7:23-25; 1ரா 8:64

லேவியராகமம் 3:4

இணைவசனங்கள்

  • +லேவி 7:1-4

லேவியராகமம் 3:5

இணைவசனங்கள்

  • +லேவி 6:12
  • +லேவி 4:29, 31

லேவியராகமம் 3:6

இணைவசனங்கள்

  • +எண் 6:13, 14

லேவியராகமம் 3:9

இணைவசனங்கள்

  • +யாத் 29:22; லேவி 9:18-20; 2நா 7:7

லேவியராகமம் 3:10

இணைவசனங்கள்

  • +லேவி 4:8, 9; 9:10

லேவியராகமம் 3:11

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சமாதான பலியில் கடவுளுடைய பங்காக.”

இணைவசனங்கள்

  • +லேவி 4:31

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 11/2020, பக். 3

லேவியராகமம் 3:14

இணைவசனங்கள்

  • +லேவி 4:24, 26

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2019, பக். 22-23

லேவியராகமம் 3:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2019, பக். 22-23

லேவியராகமம் 3:16

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சமாதான பலியில் கடவுளுடைய பங்காக.”

இணைவசனங்கள்

  • +லேவி 7:23; 1சா 2:15-17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2019, பக். 22-23

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 11/2020, பக். 3

லேவியராகமம் 3:17

இணைவசனங்கள்

  • +ஆதி 9:4; லேவி 17:10, 13; உபா 12:23; அப் 15:20, 29

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/2008, பக். 32

    5/15/2004, பக். 22

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

லேவி. 3:1லேவி 22:21; எண் 6:13, 14
லேவி. 3:3லேவி 7:29-31
லேவி. 3:3யாத் 29:13; லேவி 7:23-25; 1ரா 8:64
லேவி. 3:4லேவி 7:1-4
லேவி. 3:5லேவி 6:12
லேவி. 3:5லேவி 4:29, 31
லேவி. 3:6எண் 6:13, 14
லேவி. 3:9யாத் 29:22; லேவி 9:18-20; 2நா 7:7
லேவி. 3:10லேவி 4:8, 9; 9:10
லேவி. 3:11லேவி 4:31
லேவி. 3:14லேவி 4:24, 26
லேவி. 3:16லேவி 7:23; 1சா 2:15-17
லேவி. 3:17ஆதி 9:4; லேவி 17:10, 13; உபா 12:23; அப் 15:20, 29
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
லேவியராகமம் 3:1-17

லேவியராகமம்

3 பின்பு அவர், “‘ஒருவன் சமாதான* பலியைச்+ செலுத்த விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காளையையோ பசுவையோ யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும். 2 பலியாகச் செலுத்தப்படும் மாட்டின் தலையில் அவன் கை வைக்க வேண்டும். அது சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் வெட்டப்பட வேண்டும். குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும். 3 அந்தச் சமாதான பலியிலிருந்து யெகோவாவுக்குத் தகன பலியாக,+ குடல்களின் மேலும் அதைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும்,+ 4 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ 5 ஆரோனின் மகன்கள் அதைத் தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும், அதாவது பலிபீடத்தின் தணலில் அடுக்கப்பட்ட விறகுகள்மேல் எரிகிற தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+

6 ஒருவன் ஆடுகளில் ஒன்றை யெகோவாவுக்குச் சமாதான பலியாகச் செலுத்த விரும்பினால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எந்தக் குறையும் இல்லாததைச் செலுத்த வேண்டும்.+ 7 செம்மறியாட்டுக் கடாக் குட்டியை அவன் செலுத்த விரும்பினால், அதை யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும். 8 பலியாகச் செலுத்தப்படும் ஆட்டின் தலையில் அவன் கை வைக்க வேண்டும். அது சந்திப்புக் கூடாரத்தின் முன்னால் வெட்டப்பட வேண்டும். ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும். 9 சமாதான பலியிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ முதுகெலும்பின் பக்கத்திலுள்ள கொழுப்பு நிறைந்த வால் முழுவதையும், குடல்களின் மேலும் அதைச் சுற்றிலும் உள்ள எல்லா கொழுப்பையும், 10 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ 11 குருவானவர் பலிபீடத்தின் மேல் அதை உணவாக* எரிக்க வேண்டும். இது யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலி.+

12 ஒருவன் வெள்ளாட்டைப் பலியாகச் செலுத்த விரும்பினால், அதை யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும். 13 அதன் தலையில் அவன் கை வைக்க வேண்டும். அது சந்திப்புக் கூடாரத்தின் முன்னால் வெட்டப்பட வேண்டும். ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும். 14 யெகோவாவுக்குத் தகன பலியாக, குடல்களின் மேலும் அவற்றைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும்,+ 15 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து தகன பலியாகச் செலுத்த வேண்டும். 16 குருவானவர் பலிபீடத்தின் மேல் அதை உணவாக* எரிக்க வேண்டும். அது வாசனையான தகன பலி. கொழுப்பு முழுவதும் யெகோவாவுக்கே சொந்தம்.+

17 கொழுப்பையோ இரத்தத்தையோ நீங்கள் சாப்பிடவே கூடாது.+ நீங்கள் எங்கே குடியிருந்தாலும் சரி, தலைமுறை தலைமுறைக்கும் இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்