உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 30
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • ஆண்கள் நேர்ந்துகொள்ளும்போது (1, 2)

      • மனைவியோ மகளோ நேர்ந்துகொள்ளும்போது  (3-16)

எண்ணாகமம் 30:1

இணைவசனங்கள்

  • +யாத் 18:25

எண்ணாகமம் 30:2

இணைவசனங்கள்

  • +ஆதி 28:20-22; நியா 11:30, 31
  • +சங் 132:1-5
  • +உபா 23:21; சங் 116:14; 119:106; பிர 5:4; மத் 5:33
  • +சங் 50:14; 66:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 5/2021, பக். 2

எண்ணாகமம் 30:5

இணைவசனங்கள்

  • +யாத் 20:12

எண்ணாகமம் 30:8

இணைவசனங்கள்

  • +ரோ 7:2; 1கொ 11:3; எபே 5:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/1/2004, பக். 27

எண்ணாகமம் 30:12

இணைவசனங்கள்

  • +1கொ 11:3; 1பே 3:1

எண்ணாகமம் 30:13

அடிக்குறிப்புகள்

  • *

    விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத்தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதைக் குறிக்கலாம்.

எண்ணாகமம் 30:15

இணைவசனங்கள்

  • +உபா 23:21

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 30:1யாத் 18:25
எண். 30:2ஆதி 28:20-22; நியா 11:30, 31
எண். 30:2சங் 132:1-5
எண். 30:2உபா 23:21; சங் 116:14; 119:106; பிர 5:4; மத் 5:33
எண். 30:2சங் 50:14; 66:13
எண். 30:5யாத் 20:12
எண். 30:8ரோ 7:2; 1கொ 11:3; எபே 5:22
எண். 30:121கொ 11:3; 1பே 3:1
எண். 30:15உபா 23:21
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 30:1-16

எண்ணாகமம்

30 மோசே இஸ்ரவேலின் கோத்திரத் தலைவர்களிடம்,+ “யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் கட்டளை இதுதான்: 2 ஒருவன் எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக யெகோவாவிடம் நேர்ந்துகொண்டாலோ+ உறுதிமொழி எடுத்தாலோ+ அதை மீறக் கூடாது.+ தான் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.+

3 ஒரு இளம் பெண் தன்னுடைய அப்பாவின் வீட்டில் வாழும்போது எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக யெகோவாவிடம் நேர்ந்துகொண்டால், 4 அவள் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவளுடைய அப்பா கேள்விப்பட்டும் அவளைத் தடுக்காவிட்டால், நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவள் நிறைவேற்ற வேண்டும். 5 ஆனால், அவளுடைய அப்பா அதைக் கேள்விப்பட்டு அவளைத் தடுத்தால், நேர்ந்துகொண்டதை அவள் நிறைவேற்ற வேண்டியதில்லை. அவளுடைய அப்பா அவளைத் தடுத்துவிட்டதால் அவளை யெகோவா மன்னிப்பார்.+

6 அவள் எதையாவது நேர்ந்திருக்கும் சமயத்தில் அல்லது அவசரப்பட்டு சத்தியம் செய்திருக்கும் சமயத்தில் அவளுக்குக் கல்யாணமானால், 7 அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும் நாளில் அவளைத் தடுக்காவிட்டால், நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவள் நிறைவேற்ற வேண்டும். 8 ஆனால், அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும் நாளில் அதற்கு அனுமதி தர விரும்பாவிட்டால், அவள் நேர்ந்துகொண்டதை அல்லது அவசரப்பட்டு சத்தியம் செய்ததை அவர் ரத்து செய்யலாம்.+ யெகோவா அவளை மன்னிப்பார்.

9 விதவைப் பெண்ணோ விவாகரத்தான பெண்ணோ எதையாவது நேர்ந்துகொண்டால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.

10 ஆனாலும், ஒரு பெண் தன்னுடைய கணவனின் வீட்டில் வாழும்போது எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக கடவுளிடம் நேர்ந்துகொண்டால், 11 அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும்போது அதற்கு ஆட்சேபணையோ மறுப்போ தெரிவிக்காவிட்டால், தான் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவள் நிறைவேற்ற வேண்டும். 12 ஆனால் அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும் நாளில், அவள் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் முழுவதுமாக ரத்து செய்தால் அவள் அவற்றை நிறைவேற்ற வேண்டியதில்லை.+ அவளுடைய கணவன் அவற்றை ரத்து செய்ததால் யெகோவா அவளை மன்னிப்பார். 13 எதையாவது செய்யப்போவதாக அல்லது தன்னையே வருத்திக்கொள்ளப்போவதாக* அவள் நேர்ந்துகொண்டாலோ உறுதிமொழி எடுத்தாலோ, அதை அவள் நிறைவேற்ற வேண்டுமா வேண்டாமா என்பதைக் கணவன் தீர்மானிக்கலாம். 14 ஆனால், பல நாட்களாகியும் அவளுடைய கணவன் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காவிட்டால், அவள் நேர்ந்துகொண்ட எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று அர்த்தம். ஏனென்றால், அதைக் கேள்விப்பட்ட நாளில் அவர் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. 15 ஆனால், அதைக் கேள்விப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ரத்து செய்தால், அவளுடைய குற்றத்துக்கு அவர்தான் பொறுப்பு.+

16 ஏதோவொன்றை நேர்ந்துகொள்ளும் விஷயத்தில் கணவனுக்கும் மனைவிக்கும், அப்பாவுக்கும் அவர் வீட்டில் வாழ்கிற மகளுக்கும் மோசே மூலமாக யெகோவா கொடுத்த விதிமுறைகள் இவைதான்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்