உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 35
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எசேக்கியேல் முக்கியக் குறிப்புகள்

      • சேயீர் மலைப்பகுதிக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-15)

எசேக்கியேல் 35:2

இணைவசனங்கள்

  • +ஆதி 32:3; உபா 2:5
  • +எரே 49:8; புல 4:22; எசே 25:8, 9; ஒப 1

எசேக்கியேல் 35:3

இணைவசனங்கள்

  • +எசே 25:12, 13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 133

எசேக்கியேல் 35:4

இணைவசனங்கள்

  • +யோவே 3:19; மல் 1:3

எசேக்கியேல் 35:5

இணைவசனங்கள்

  • +ஆதி 27:41; ஆமோ 1:11
  • +சங் 137:7; ஒப 10

எசேக்கியேல் 35:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

இணைவசனங்கள்

  • +ஒப 15
  • +எசே 25:14

எசேக்கியேல் 35:7

இணைவசனங்கள்

  • +எசே 25:13

எசேக்கியேல் 35:9

இணைவசனங்கள்

  • +எரே 49:17, 18; எசே 25:13; மல் 1:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/1/1988, பக். 24

எசேக்கியேல் 35:10

இணைவசனங்கள்

  • +எசே 36:5; ஒப 13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/1/1988, பக். 24

எசேக்கியேல் 35:11

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

இணைவசனங்கள்

  • +ஆமோ 1:11

எசேக்கியேல் 35:13

இணைவசனங்கள்

  • +ஒப 3

எசேக்கியேல் 35:15

இணைவசனங்கள்

  • +புல 4:21; ஒப 12, 15
  • +ஏசா 34:5; எசே 25:12, 13; 36:5

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எசே. 35:2ஆதி 32:3; உபா 2:5
எசே. 35:2எரே 49:8; புல 4:22; எசே 25:8, 9; ஒப 1
எசே. 35:3எசே 25:12, 13
எசே. 35:4யோவே 3:19; மல் 1:3
எசே. 35:5ஆதி 27:41; ஆமோ 1:11
எசே. 35:5சங் 137:7; ஒப 10
எசே. 35:6ஒப 15
எசே. 35:6எசே 25:14
எசே. 35:7எசே 25:13
எசே. 35:9எரே 49:17, 18; எசே 25:13; மல் 1:4
எசே. 35:10எசே 36:5; ஒப 13
எசே. 35:11ஆமோ 1:11
எசே. 35:13ஒப 3
எசே. 35:15புல 4:21; ஒப 12, 15
எசே. 35:15ஏசா 34:5; எசே 25:12, 13; 36:5
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எசேக்கியேல் 35:1-15

எசேக்கியேல்

35 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “மனிதகுமாரனே, சேயீர்+ மலைப்பகுதிக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அதற்கு எதிராக இப்படித் தீர்க்கதரிசனம் சொல்:+ 3 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “சேயீர் மலைப்பகுதியே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன். உன்னைத் தண்டித்து, உன்னை வெறும் பொட்டல் காடாக்குவேன்.+ 4 உன்னுடைய நகரங்களை நாசமாக்குவேன். நீ வெறும் பொட்டல் காடாக ஆவாய்.+ அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வாய். 5 நீ பல காலமாக இஸ்ரவேலர்கள்மேல் பகையைக் காட்டிவருகிறாய்.+ அவர்களுக்கு இறுதி தண்டனை கிடைத்த நாளிலே,+ அதாவது அழிவு நாளிலே, அவர்களை எதிரிகளிடம் பிடித்துக் கொடுத்து வாளுக்குப் பலியாக்கினாய்.”’

6 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இரத்தம் சிந்தப்படுவதற்காக நான் உன்னைத் தயாராக்குவேன், சீக்கிரத்தில் உன் இரத்தம் சிந்தப்படும்.+ நீ இரத்தத்தை வெறுத்ததால் சீக்கிரத்தில் உன் இரத்தமே சிந்தப்படும்.+ 7 சேயீர் மலைப்பகுதியே, நான் உன்னைப் பொட்டல் காடாக்குவேன்.+ உன் இடத்துக்கு வந்து போகிற எல்லாரையும் கொன்றுபோடுவேன். 8 உன்னுடைய மலைகளைப் பிணங்களால் நிரப்புவேன். வாளால் வெட்டப்பட்டவர்கள் உன்னுடைய குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஓடைகளிலும் கிடப்பார்கள். 9 நான் உன்னை அடியோடு அழித்துவிடுவேன். உன்னுடைய நகரங்களில் இனி யாரும் குடியிருக்க மாட்டார்கள்.+ அப்போது, நான் யெகோவா என்று நீ தெரிந்துகொள்வாய்.’

10 ‘இந்த இரண்டு தேசங்களும் எனக்குச் சொந்தமாகும், இரண்டையுமே நாங்கள் கைப்பற்றுவோம்’+ என்று நீ சொன்னாய். யெகோவா அங்கே இருந்தும் நீ அப்படிச் சொன்னாய். 11 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நீ அவர்கள்மேல் பொறாமைப்பட்டு எந்தளவுக்கு வெறுப்பையும் கோபத்தையும் காட்டினாயோ அந்தளவுக்கு நான் உனக்குப் பதிலடி கொடுப்பேன்.+ உன்னைத் தண்டிக்கும்போது, நான் யார் என்று அவர்களுக்குக் காட்டுவேன். 12 நீ இஸ்ரவேலின் மலைகளுக்கு எதிராகத் திமிரோடு பேசினாய். “அவை பாழாக்கப்பட்டன, நமக்கு இரையாகக் கொடுக்கப்பட்டன” என்று சொன்னாய். இதையெல்லாம் யெகோவாவாகிய நான் கேட்டேன் என்று அப்போது நீ தெரிந்துகொள்வாய். 13 நீ எனக்கு எதிராக ஆணவத்தோடு வாய்மூடாமல் பேசிக்கொண்டே இருந்தாய்.+ அதையெல்லாம் நான் கேட்டேன்.’

14 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் உன்னை அழித்துப் பாழாக்கும்போது உலகமே சந்தோஷப்படும். 15 இஸ்ரவேலர்களுடைய தேசம் பாழாக்கப்பட்டபோது நீ சந்தோஷப்பட்டாயே. அதற்குத் தகுந்த பதிலடியை நான் கொடுப்பேன்.+ சேயீர் மலைப்பகுதியே, நீ பாழாகிப்போவாய். ஏதோம் முழுவதும் அழிந்து நாசமாகும்.+ அப்போது, நான் யெகோவா என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்’” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்