உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 7:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எகிப்துக்கு எதிராக என் பலத்தைக் காட்டி இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வரும்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்று சொன்னார்.

  • யாத்திராகமம் 7:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அதனால் யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நான் யெகோவா என்று உனக்குக் காட்டுவேன்.+ என் கையிலுள்ள இந்தக் கோலினால் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன், அது இரத்தமாக மாறும்.

  • யாத்திராகமம் 8:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அப்போது மோசே பார்வோனிடம், “நான் எப்போது கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டுமென்று நீங்களே சொல்லுங்கள். அதன்பின், உங்களையும் உங்களுடைய ஊழியர்களையும் ஜனங்களையும் வீடுகளையும்விட்டுத் தவளைகள் போய்விடும், அவை நைல் நதியில் மட்டும்தான் இருக்கும்” என்றார். 10 அதற்கு அவன், “நாளைக்கு வேண்டிக்கொள்” என்றான். உடனே மோசே, “நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன். எங்கள் கடவுளாகிய யெகோவாவைப் போல் வேறு யாரும் இல்லை என்பதை அப்போது நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+

  • யாத்திராகமம் 8:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 ஆனால் அந்த நாளில், என் ஜனங்கள் வாழ்கிற கோசேன் பிரதேசத்தை மட்டும் நான் ஒன்றும் செய்ய மாட்டேன். அங்கு ஈக்களே வராது.+ அப்போது, யெகோவாவாகிய நான் இந்தத் தேசத்தில் இருக்கிறேன் என்று நீ தெரிந்துகொள்வாய்.+

  • யாத்திராகமம் 14:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்.+ அவன் அவர்களைத் துரத்திக்கொண்டு வருவான். பார்வோனையும் அவனுடைய எல்லா படைகளையும் தோற்கடிப்பதன் மூலம் எனக்குப் புகழ் சேர்ப்பேன்.+ அப்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்றார். அவர் சொன்னபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.

  • உபாகமம் 10:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இதோ! வானமும், ஏன் வானாதி வானமும், பூமியும் அதில் உள்ளவையும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+

  • சங்கீதம் 24:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 பூமியும் அதிலிருக்கிற அனைத்தும் யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+

      நிலப்பரப்பும் அதில் குடியிருக்கிற எல்லாரும் அவருக்குத்தான் சொந்தம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்