உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 7:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஏனென்றால், உங்கள் மகன்கள் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களை வணங்கும்படி அவர்கள் செய்துவிடுவார்கள்.+ அப்போது யெகோவாவின் கோபம் உங்கள்மேல் பற்றியெரியும். அவர் உங்களை ஒரு நொடியில் அழித்துவிடுவார்.+

  • உபாகமம் 31:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 யெகோவா மோசேயிடம், “நீ இறக்கப்போகிறாய். இந்த ஜனங்கள், நான் கொடுக்கப்போகிற தேசத்திலுள்ள தெய்வங்களை வணங்கி எனக்குத் துரோகம் செய்வார்கள்.+ என்னைவிட்டு விலகி,+ நான் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை மீறுவார்கள்.+

  • நியாயாதிபதிகள் 2:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆனால், அந்த நியாயாதிபதிகளின் பேச்சையும் அவர்கள் கேட்கவில்லை. மற்ற தெய்வங்களை வணங்கி யெகோவாவுக்குத் துரோகம் செய்தார்கள். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த முன்னோர்களின் வழியைவிட்டு சீக்கிரமாக விலகிப்போனார்கள்.+ அந்த முன்னோர்களைப் போல அவர்கள் நடக்கவில்லை.

  • நியாயாதிபதிகள் 8:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 கிதியோன் இறந்த உடனேயே, இஸ்ரவேலர்கள் மறுபடியும் பாகால்களை வணங்கி கடவுளுக்குத் துரோகம் செய்தார்கள்.+ பாகால்-பேரீத்தைத் தங்களுடைய தெய்வமாக வைத்துக்கொண்டார்கள்.+

  • 1 ராஜாக்கள் 11:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஆனால், அந்தத் தேசத்து மக்களைப் பற்றி யெகோவா ஏற்கெனவே இஸ்ரவேலர்களுக்கு எச்சரிப்பு கொடுத்திருந்தார்; “நீங்கள் அவர்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது,* அவர்களும் உங்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது. அப்படிச் சம்பந்தம் வைத்தால், அவர்கள் கண்டிப்பாக உங்கள் மனதை மாற்றி, தங்களுடைய தெய்வங்களை வணங்க வைத்துவிடுவார்கள்”+ என்று சொல்லியிருந்தார். ஆனால் சாலொமோன் அந்தப் பெண்கள்மீது* கொள்ளை ஆசை வைத்திருந்தார், அவர்களை நேசித்தார்.

  • நெகேமியா 13:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 பின்பு, “மற்ற தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்ததால்தானே இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் பாவம் செய்தார்? அவரைப் போல ஒரு ராஜா வேறு எங்குமே இருந்ததில்லை.+ அவரைக் கடவுள் நேசித்ததால்தான்+ இஸ்ரவேல் தேசம் முழுவதற்கும் ராஜாவாக்கினார். அப்படிப்பட்டவரையே மற்ற தேசத்துப் பெண்கள் பாவம் செய்ய வைத்துவிட்டார்கள்.+

  • சங்கீதம் 106:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அவர்கள் பாகால் பேயோரை வணங்க ஆரம்பித்தார்கள்.+

      செத்தவர்களுக்கு* படைக்கப்பட்டதைச் சாப்பிட்டார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்