-
உபாகமம் 4:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 அந்தத் தேசத்தில் நீங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பெற்று நீண்ட காலம் வாழ்ந்தபின், நீங்கள் தறிகெட்டுப்போய் ஏதாவது ஒரு உருவத்தை உண்டாக்கினாலோ,+ உங்கள் கடவுளாகிய யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாலோ,+ 26 யோர்தானைக் கடந்துபோய் நீங்கள் சொந்தமாக்கப்போகிற அந்தத் தேசத்திலிருந்து சீக்கிரமாக அழிந்துபோவீர்கள், இது நிச்சயம். இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து இதைச் சொல்கிறேன். அந்தத் தேசத்தில் நீங்கள் ரொம்பக் காலம் வாழ மாட்டீர்கள், அடியோடு அழிந்துபோவீர்கள்.+
-
-
உபாகமம் 30:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 ஆனால் உங்கள் இதயம் அவரைவிட்டு விலகிவிட்டால்,+ அதாவது நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்காமல் வேறு தெய்வங்கள்மேல் ஆசைப்பட்டு அவற்றை வணங்கினால்,+ 18 நிச்சயம் அழிந்துபோவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.+ நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் ரொம்பக் காலம் வாழ மாட்டீர்கள்.
-
-
யோசுவா 23:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 நீங்கள் அவரைவிட்டு விலகி, உங்கள் நடுவில் எஞ்சியிருக்கிற தேசத்தாருடன்+ சேர்ந்துகொண்டு, அவர்களோடு சம்பந்தம் பண்ணினால்,*+ நீங்களும் அவர்களும் ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பழகினால், 13 உங்கள் கடவுளாகிய யெகோவா இனி அவர்களை உங்கள் முன்னாலிருந்து துரத்திவிட மாட்டார்+ என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்திருக்கிற இந்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் அழிந்துபோகும்வரை அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், உங்கள் முதுகுக்குச் சாட்டையாகவும்,+ உங்கள் கண்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
-