-
யோசுவா 5:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 இஸ்ரவேல் ஆண்கள் எல்லாருக்கும் விருத்தசேதனம் செய்து முடிக்கப்பட்டது. அவர்கள் குணமாகும்வரை, முகாம்போட்டிருந்த இடத்திலேயே தங்கியிருந்தார்கள்.
9 பின்பு யெகோவா யோசுவாவிடம், “எகிப்தியர்கள் உங்களுக்கு எதிராகப் பேசிய பழிப்பேச்சுக்கு இன்று நான் முடிவுகட்டிவிட்டேன்”* என்று சொன்னார். அதனால், அந்த இடம் கில்கால்*+ என்று இந்த நாள்வரை அழைக்கப்படுகிறது.
-
-
யோசுவா 10:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அப்போது, கில்காலில் முகாம்போட்டிருந்த+ யோசுவாவுக்கு கிபியோனியர்கள் செய்தி அனுப்பி, “உங்கள் அடிமைகளாகிய எங்களைக் கைவிட்டுவிடாதீர்கள்,+ உடனே வந்து எங்களைக் காப்பாற்றுங்கள்! எங்களுக்கு உதவுங்கள்! மலைப்பகுதியிலுள்ள எமோரிய ராஜாக்கள் எல்லாரும் எங்களுக்கு எதிராகப் படைதிரண்டு வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.
-