-
எரேமியா 40:7-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படாமல் தேசத்திலேயே விடப்பட்ட+ பரம ஏழைகளான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் அதிகாரியாக அகிக்காமின் மகன் கெதலியாவை பாபிலோன் ராஜா நியமித்திருந்த செய்தியைத் தேசத்திலிருந்த எல்லா படைத் தலைவர்களும் அவர்களோடு இருந்த ஆட்களும் கேள்விப்பட்டார்கள். 8 அவர்கள் எல்லாரும், அதாவது நெத்தனியாவின் மகன் இஸ்மவேல்,+ கரேயாவின் மகன்களான யோகனான்+ மற்றும் யோனத்தான், தன்கூமேத்தின் மகன் செராயா, நெத்தோபாத்தியனான ஏப்பாயின் மகன்கள், மாகாத்தியன் ஒருவனுடைய மகன் யெசனியா+ ஆகியவர்களும் அவர்களுடைய ஆட்களும், மிஸ்பாவிலிருந்த+ கெதலியாவிடம் வந்தார்கள். 9 சாப்பானின் மகனாகிய அகிக்காமின் மகன் கெதலியா, அவர்களிடமும் அவர்களுடைய ஆட்களிடமும் உறுதிமொழி கொடுத்து, “கல்தேயர்களுக்குச் சேவை செய்யப் பயப்படாதீர்கள். இந்தத் தேசத்திலேயே இருந்து, பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யுங்கள். அப்போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ்வீர்கள்.+
-