-
யாத்திராகமம் 8:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 உடனே, எகிப்தின் நீர்நிலைகள்மேல் ஆரோன் தன்னுடைய கோலை நீட்டினார். அப்போது, தவளைகள் நதியிலிருந்து வந்து எகிப்து தேசமெங்கும் நிறைந்தன.
-
-
யாத்திராகமம் 9:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அதனால், சூளையிலிருந்த சாம்பலை அவர்கள் எடுத்துக்கொண்டு போய் பார்வோனின் முன்னால் நின்றார்கள். மோசே அதைக் காற்றில் வீசியபோது, அது மனிதர்கள்மேலும் மிருகங்கள்மேலும் பயங்கரமான கொப்புளங்களாக ஆனது.
-
-
யாத்திராகமம் 10:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அப்போது யெகோவா மோசேயிடம், “எகிப்து தேசத்தின் மேல் உன் கையை நீட்டு. தேசமெங்கும் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வரட்டும். ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய பயிர்பச்சைகள் எல்லாவற்றையும் அவை தின்றுதீர்க்கட்டும்” என்றார்.
-
-
யாத்திராகமம் 10:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 பின்பு யெகோவா மோசேயிடம், “வானத்துக்கு நேராக உன் கையை நீட்டு. அப்போது, எகிப்து தேசம் இருட்டாகிவிடும். அந்த இருட்டு படுபயங்கரமாக இருக்கும்” என்றார்.
-