16 உன்னைப் பார்க்கிறவர்கள் அதிர்ச்சி அடைவார்கள்.
உன்னை உற்றுப் பார்த்து,
‘இவன்தான் உலகத்தையே ஆட்டிப்படைத்தவனா?
இவன்தான் எல்லா ராஜ்யங்களையும் நடுங்க வைத்தவனா?+
17 ஊர்களையெல்லாம் அழித்து,
உலகத்தை வனாந்தரம்போல் மாற்றியவன்+ இவன்தானா?
கைதிகளை விடுதலை செய்யாமல் வைத்துக்கொண்டவன்+ இவன்தானா?’ என்று கேட்பார்கள்.