-
நெகேமியா 2:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 பின்பு ராஜாவிடம், “நான் ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ வழியாகத்தான் யூதாவுக்குப் போக வேண்டும். அதனால் உங்களுக்கு நல்லதாகப் பட்டால், அந்தப் பிரதேசத்தின் வழியாகப் போக என்னை அனுமதிக்கும்படி அங்கே இருக்கிற ஆளுநர்களுக்குக் கடிதங்களை எழுதிக் கொடுங்கள். 8 ஆலயத்தைச் சேர்ந்த கோட்டையின் கதவுகளுக்கும்,+ நகரத்தின் மதில்களுக்கும்,+ நான் தங்கப்போகிற வீட்டுக்கும் வேண்டிய மரச்சட்டங்களைத் தரும்படி ராஜாவுடைய வன* அதிகாரியான ஆசாபுக்கும் கடிதம் எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டேன். என் கடவுள் எனக்கு உறுதுணையாக இருந்ததால்+ ராஜா அவற்றை எழுதிக் கொடுத்தார்.+
-