உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 28:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 யூதா மக்கள் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்வதற்கு இஸ்ரவேலின் ராஜாவான ஆகாஸ் காரணமாக இருந்தார், அவர்கள் யெகோவாவுக்குக் கொஞ்சம்கூட உண்மையாக இருக்கவில்லை. அதனால்தான், யூதா மக்களுக்கு இப்பேர்ப்பட்ட அவமானத்தை யெகோவா ஏற்படுத்தினார்.

      20 அசீரிய ராஜாவான தில்காத்-பில்நேசர்+ ஆகாசுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, அவரையே எதிர்த்து வந்து அவருக்குக் கஷ்டம் கொடுத்தான்.+

  • ஏசாயா 7:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆகாசே, உனக்கும் உன் மக்களுக்கும் உன்னுடைய அப்பாவின் குடும்பத்தாருக்கும் எதிராக யெகோவா அசீரிய ராஜாவை வரச் செய்வார்.+ எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்து போனதுமுதல்+ அந்த நாள்வரை அப்படிப்பட்ட ஒரு கொடிய காலம் வந்திருக்காது.

  • ஏசாயா 7:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆற்றின்* பகுதியிலிருந்து வாடகைக்கு வாங்கப்பட்ட சவரக்கத்தியைக் கொண்டு, அதாவது அசீரிய ராஜாவைக் கொண்டு,+ தலையிலும் கால்களிலும் உள்ள முடியை யெகோவா சிரைத்துவிடுவார்; தாடியைக்கூட விட்டுவைக்க மாட்டார்.

  • ஏசாயா 10:28-32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அவன் ஆயாத் நகரத்துக்கு+ வந்திருக்கிறான்.

      மிக்ரோனைக் கடந்துவிட்டான்.

      மிக்மாஷில்+ தன்னுடைய பொருள்களை வைத்திருக்கிறான்.

      29 அவன் ஆற்றுத்துறையை* தாண்டிவிட்டான்.

      ராத்திரியிலே கெபாவில்+ தங்குகிறான்.

      ராமாவிலுள்ள ஜனங்கள் பயந்து நடுங்குகிறார்கள்,

      சவுலின் ஊரான கிபியாவிலுள்ள+ மக்கள் ஓடிவிட்டார்கள்.+

      30 காலீம் மக்களே, சத்தமாக அலறுங்கள்!

      லாயீஷ் மக்களே, கவனியுங்கள்!

      ஆனதோத்+ மக்களே, நீங்களும் கவனியுங்கள்!

      31 மத்மேனாவின் மக்கள் ஓட்டம் பிடித்தார்கள்.

      கேபிம் குடிமக்கள் பாதுகாப்பைத் தேடிப்போனார்கள்.

      32 அவன் இன்று நோபு நகரத்தில்+ தங்குவான்.

      அவன் சீயோன் மகளுடைய மலையையும்,

      எருசலேம் குன்றையும் பார்த்துக் கை நீட்டி மிரட்டுகிறான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்