-
ஏசாயா 2:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:
யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.+
எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.
எல்லா தேசத்து ஜனங்களும் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+
3 அங்கே வருகிற பலதரப்பட்ட ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,
“வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.
யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+
அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.
நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.+
-
-
ஏசாயா 56:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 என் ஜனங்களோடு சேர்ந்துகொள்ள வருகிற மற்ற தேசத்து ஜனங்களையும் நான் ஏற்றுக்கொள்வேன்.
யெகோவாவுக்குச் சேவை செய்யவும், யெகோவாவின் பெயரை நேசிக்கவும்,+
அவருடைய ஊழியர்களாக இருக்கவும் அவர்கள் வருவார்கள்.
அவர்கள் என்னுடைய ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுக்காமல் அதை அனுசரிப்பார்கள்.
என்னுடைய ஒப்பந்தத்தின்படி நடப்பார்கள்.
7 அவர்களையும் என்னுடைய பரிசுத்த மலைக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+
என்னுடைய ஜெப வீட்டில் அவர்களைச் சந்தோஷமாக இருக்க வைப்பேன்.
என்னுடைய பலிபீடத்தில் அவர்கள் செலுத்துகிற தகன பலிகளையும் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்வேன்.
ஏனென்றால், என் வீடு எல்லா ஜனங்களுக்குமான ஜெப வீடு என்று அழைக்கப்படும்.”+
-
-
மீகா 4:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:
யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை+ எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.
எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.
பலதரப்பட்ட ஜனங்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+
2 பல தேசங்களிலிருந்து வருகிற ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,
“வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.
யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+
அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.
நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.
ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*
எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.
-
-
சகரியா 8:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 பல இனங்களையும் பலம்படைத்த தேசங்களையும் சேர்ந்தவர்கள், பரலோகப் படைகளின் யெகோவாவைத் தேடவும் யெகோவாவிடம் கருணை கேட்டுக் கெஞ்சவும் எருசலேமுக்கு வருவார்கள்.’+
23 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த நாட்களில், மற்ற தேசங்களைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களிலும் பத்துப் பேர்+ ஒரு யூதனுடைய உடையை* இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, “கடவுள் உங்களோடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம்.+ அதனால், நாங்களும் உங்களோடு வருகிறோம்”+ என்று சொல்வார்கள்.’”
-