உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 22:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 பூமியெங்கும் இருக்கிறவர்கள் யெகோவாவை நினைத்துப் பார்த்து அவரிடம் திரும்புவார்கள்.

      பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உங்கள் முன்னால் தலைவணங்கும்.+

  • ஏசாயா 2:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:

      யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.+

      எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.

      எல்லா தேசத்து ஜனங்களும் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+

       3 அங்கே வருகிற பலதரப்பட்ட ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,

      “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.

      யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+

      அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.

      நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.+

      ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*

      எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.+

  • ஏசாயா 11:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அந்த நாளில், ஈசாயின் வேராக+ இருப்பவர் ஜனங்களுக்கு ஒரு கொடிக் கம்பம் போல நிற்பார்.+

      பல தேசத்து ஜனங்கள் அவரைத் தேடி* வருவார்கள்.+

      அவர் தங்கும் இடம் மகிமையால் நிறைந்திருக்கும்.

  • ஏசாயா 55:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 இதோ, முன்பின் தெரியாத ஜனங்களை நீ* அழைப்பாய்.

      உன்னைப் பற்றித் தெரியாத அந்த ஜனங்கள் உன்னிடம் ஓடிவருவார்கள்.

      உன் கடவுளான யெகோவா உனக்குச் செய்வதைப் பார்த்து+ அவர்கள் உன்னிடம் ஓடிவருவார்கள்.

      ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்த கடவுள் உன்னை மேன்மைப்படுத்துவார்.+

  • ஏசாயா 60:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 தேசங்கள் உன்னுடைய வெளிச்சத்திடம் வரும்.+

      ராஜாக்கள்+ உன்னுடைய பிரகாசமான ஒளியிடம் வருவார்கள்.+

  • ஓசியா 1:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதோடு, “அளக்கவோ எண்ணவோ முடியாத கடற்கரை மணலைப் போல இஸ்ரவேல் ஜனங்கள் ஏராளமாக இருப்பார்கள்.+ ‘நீங்கள் என்னுடைய ஜனங்கள் அல்ல’+ என்று எந்த இடத்தில் சொல்லப்பட்டதோ அதே இடத்தில், ‘நீங்கள் உயிருள்ள கடவுளின் பிள்ளைகள்’+ என்று சொல்லப்படும்.

  • மீகா 4:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 பல தேசங்களிலிருந்து வருகிற ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,

      “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.

      யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+

      அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.

      நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.

      ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*

      எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.

  • ஆகாய் 2:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ‘எல்லா தேசங்களையும் நான் உலுக்குவேன். அப்போது, எல்லா தேசங்களின் செல்வங்களும்* இந்த ஆலயத்துக்குள் வந்து சேரும்.+ இந்த ஆலயத்தை நான் மகிமையால் நிரப்புவேன்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்