-
எரேமியா 29:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 என்னைக் கண்டடைய நான் உங்களுக்கு உதவுவேன்’+ என்று யெகோவா சொல்கிறார். ‘சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+ உங்களைத் துரத்தியடித்த எல்லா தேசங்களிலிருந்தும் எல்லா இடங்களிலிருந்தும் உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ மறுபடியும் உங்கள் தேசத்துக்கே கூட்டிக்கொண்டு வருவேன்’ என்று யெகோவா சொல்கிறார்.
-
-
எரேமியா 32:44பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
44 ‘பென்யமீன் தேசத்திலும்+ எருசலேமின் சுற்றுவட்டாரத்திலும் யூதாவின் நகரங்களிலும்+ மலைப்பகுதியிலுள்ள நகரங்களிலும் தாழ்வான பிரதேசத்திலுள்ள நகரங்களிலும்+ தெற்கே உள்ள நகரங்களிலும் நிலங்கள் பணம் கொடுத்து வாங்கப்படும், பத்திரங்கள் எழுதப்பட்டு முத்திரை போடப்படும், சாட்சிகள் வரவழைக்கப்படுவார்கள். ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்’+ என்று யெகோவா சொல்கிறார்.”
-
-
ஆமோஸ் 9:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.+
இடிந்து கிடக்கும் நகரங்களை அவர்கள் மறுபடியும் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.+
திராட்சைத் தோட்டங்களை அமைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிப்பார்கள்.+
பழத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.’+
-