உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 26:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 தேசத்தில் நான் சமாதானத்தைத் தருவேன்.+ நீங்கள் யாரைக் கண்டும் பயப்படாமல் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவீர்கள்.+ தேசத்திலிருந்து கொடிய மிருகங்களைத் துரத்தியடிப்பேன். யாரும் வாளை எடுத்துக்கொண்டு உங்களோடு போர் செய்ய வர மாட்டார்கள்.

  • ஏசாயா 11:6-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அப்போது, ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்.+

      வெள்ளாட்டுக் குட்டி சிறுத்தையோடு படுத்துக்கொள்ளும்.

      கன்றுக்குட்டியும் சிங்கமும் கொழுத்த காளையும்* ஒன்றாக இருக்கும்.*+

      ஒரு சின்னப் பையன் அவற்றை ஓட்டிக்கொண்டு போவான்.

       7 பசுவும் கரடியும் சேர்ந்து மேயும்.

      அவற்றின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்.

      சிங்கம் மாட்டைப் போல வைக்கோல் தின்னும்.+

       8 பால் குடிக்கும் குழந்தை நாகப்பாம்புப் புற்றின் மேல் விளையாடும்.

      பால் மறந்த பிள்ளை விஷப் பாம்பின் பொந்தில் தன் கையை விடும்.

       9 என்னுடைய பரிசுத்த மலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது.+

      எந்தக் கேடும் வராது.+

      ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல

      பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+

  • ஏசாயா 35:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 அங்கே சிங்கம் இருக்காது.

      கொடிய காட்டு மிருகங்கள் எதுவுமே இருக்காது.

      அவை அந்த வழியிலேயே வராது.+

      மீட்கப்பட்டவர்கள் மட்டுமே அதில் நடப்பார்கள்.+

  • ஏசாயா 65:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 ஓநாயும் செம்மறியாட்டுக் குட்டியும் ஒன்றாக மேயும்.

      சிங்கம் மாட்டைப் போல வைக்கோலைத் தின்னும்.+

      பாம்பு வெறும் மண்ணைச் சாப்பிடும்.

      என்னுடைய பரிசுத்த மலையில் அவை எந்தத் தீங்கும் செய்யாது, எந்தக் கேடும் செய்யாது”+ என்று யெகோவா சொல்கிறார்.

  • ஓசியா 2:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அந்த நாளில், என் ஜனங்களுக்காகக் காட்டு மிருகங்களோடும்,+

      வானத்துப் பறவைகளோடும், ஊரும் பிராணிகளோடும் ஒரு ஒப்பந்தம் செய்வேன்.+

      தேசத்திலிருந்து வில்லையும் வாளையும் போரையும் ஒழித்துக்கட்டுவேன்.+

      அவர்களைப் பாதுகாப்பாகப் படுத்துக்கொள்ள* செய்வேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்