-
எரேமியா 30:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 யெகோவா சொல்வது இதுதான்:
“சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் சந்ததியை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+
அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்.
அவர்களுடைய நகரம் மறுபடியும் மலைமேல் கட்டப்படும்.+
அவர்களுடைய கோட்டை அதற்குரிய இடத்தில் அமைக்கப்படும்.
19 அவர்கள் நன்றி சொல்வார்கள், சந்தோஷமாக வாய்விட்டுச் சிரிப்பார்கள்.+
அவர்களை யாரும் அற்பமாகப் பார்க்க மாட்டார்கள்.+
-
-
ஆமோஸ் 9:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.+
இடிந்து கிடக்கும் நகரங்களை அவர்கள் மறுபடியும் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.+
திராட்சைத் தோட்டங்களை அமைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிப்பார்கள்.+
பழத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.’+
-