-
எசேக்கியேல் 35:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 ‘இந்த இரண்டு தேசங்களும் எனக்குச் சொந்தமாகும், இரண்டையுமே நாங்கள் கைப்பற்றுவோம்’+ என்று நீ சொன்னாய். யெகோவா அங்கே இருந்தும் நீ அப்படிச் சொன்னாய். 11 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நீ அவர்கள்மேல் பொறாமைப்பட்டு எந்தளவுக்கு வெறுப்பையும் கோபத்தையும் காட்டினாயோ அந்தளவுக்கு நான் உனக்குப் பதிலடி கொடுப்பேன்.+ உன்னைத் தண்டிக்கும்போது, நான் யார் என்று அவர்களுக்குக் காட்டுவேன்.
-
-
செப்பனியா 2:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 “மோவாபின் பழிப்பேச்சுகளையும்+ அம்மோனின் அவமரியாதையான பேச்சுகளையும்+ நான் கேட்டேன்.
என் ஜனங்களைக் கேவலப்படுத்தி, அவர்களுடைய தேசத்தைக் கைப்பற்றப்போவதாக அவர்கள் பெருமையடித்தார்கள்”+ என்று கடவுள் சொல்கிறார்.
9 இஸ்ரவேலின் கடவுளாகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* மோவாப் தேசம் சோதோமைப் போல ஆகிவிடும்.+
அம்மோனியர்களின் தேசம் கொமோராவைப் போல ஆகிவிடும்.+
அது முள்காடாகவும் உப்புநிலமாகவும் மாறும், என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.+
என் ஜனங்களில் மீதியானவர்கள் அந்தத் தேசங்களைச் சூறையாடுவார்கள்.
என் தேசத்தில் மீதியிருக்கிறவர்கள் அவற்றைக் கைப்பற்றுவார்கள்.
-