உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 23:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இஸ்ரவேலர்களைப் பாவத்தில் விழவைக்க நேபாத்தின் மகன் யெரொபெயாம் பெத்தேலில் கட்டிய ஆராதனை மேட்டையும் பலிபீடத்தையும்+ உடைத்துப்போட்டார். அவற்றை உடைத்த பின்பு ஆராதனை மேட்டை எரித்துப்போட்டார், அதைத் தூள்தூளாக்கினார்; அங்கிருந்த பூஜைக் கம்பத்தை* எரித்துப்போட்டார்.+

      16 யோசியா திரும்பிப் பார்த்தபோது, அங்கே இருக்கிற மலைமேல் கல்லறைகள் இருப்பதைக் கண்டார்; உடனே, அங்கிருந்த எலும்புகளை எடுத்துவரச் சொன்னார்; அவற்றை அந்தப் பலிபீடத்தில் எரித்து, அதை வழிபாட்டுக்காகப் பயன்படுத்த முடியாதபடி செய்தார். இப்படி நடக்குமென்று உண்மைக் கடவுளின் ஊழியர் மூலம் சொல்லப்பட்ட யெகோவாவின் வார்த்தை அப்போது நிறைவேறியது.+

  • 2 நாளாகமம் 31:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 பண்டிகை முடிந்தவுடன், அங்கே வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் யூதா நகரங்களுக்குப் போய் அங்கிருந்த பூஜைத் தூண்களை நொறுக்கினார்கள்,+ பூஜைக் கம்பங்களை* வெட்டினார்கள்;+ யூதா, பென்யமீன் முழுவதிலும் இருந்த ஆராதனை மேடுகளையும்+ பலிபீடங்களையும் அழித்தார்கள்.+ அதுமட்டுமல்ல, எப்பிராயீமிலும் மனாசேயிலும்+ இருந்தவற்றையும் அழித்தார்கள். எல்லாவற்றையும் அடியோடு அழித்த பின்பு, இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவரவருடைய நகரங்களுக்குத் திரும்பினார்கள்.

  • 2 நாளாகமம் 34:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 யோசியா+ ராஜாவானபோது அவருக்கு எட்டு வயது; அவர் 31 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+

  • 2 நாளாகமம் 34:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 கட்டப்பட்டிருந்த பலிபீடங்களையும் உடைத்துப்போட்டார், பூஜைக் கம்பங்களை* வெட்டிப்போட்டார், செதுக்கப்பட்ட சிலைகளைத்+ தூள்தூளாக நொறுக்கிப்போட்டார். இஸ்ரவேல் தேசமெங்கும் இருந்த தூபபீடங்கள் எல்லாவற்றையும் உடைத்துப்போட்டார்.+ அதன் பின்பு, எருசலேமுக்குத் திரும்பினார்.

  • ஓசியா 10:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 அவர்கள் வெளிவேஷம் போடுகிறார்கள்.*

      இப்போது கையும் களவுமாகப் பிடிபடுவார்கள்.

      ஒருவர் வந்து அவர்களுடைய பலிபீடங்களை உடைப்பார், பூஜைத் தூண்களை நொறுக்குவார்.

  • மீகா 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நான் சமாரியாவைக் கல்லும் மண்ணும் கிடக்கிற இடமாகவும்,

      திராட்சைக் கொடிகளை நடுகிற இடமாகவும் ஆக்குவேன்.

      அவளுடைய கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு,

      அவளுடைய அஸ்திவாரங்கள் வெளியே தெரியும்படி செய்வேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்