உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 16:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அப்போது இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ சந்தோஷமானவன். ஏனென்றால், இதை உனக்கு எந்த மனுஷனும்* வெளிப்படுத்தவில்லை, என் பரலோகத் தகப்பன்தான் வெளிப்படுத்தியிருக்கிறார்.+

  • மாற்கு 4:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதற்கு அவர், “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியம்+ உங்களுக்கு வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது; ஆனால் மற்றவர்களுக்கு எல்லா விஷயங்களும் உவமைகளாகவே சொல்லப்படுகின்றன.+

  • எபேசியர் 3:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அந்த ரகசியம் அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் இப்போது கடவுளுடைய சக்தியால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற அளவுக்கு, கடந்த தலைமுறையைச் சேர்ந்த யாருக்கும் வெளிப்படுத்தப்படவில்லை.+

  • 2 தீமோத்தேயு 1:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவர் நம்முடைய செயல்களால் அல்ல, தன்னுடைய சொந்த நோக்கத்தாலும் அளவற்ற கருணையாலும் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார்,+ பரிசுத்தவான்களாக அழைத்திருக்கிறார்;+ அவருடைய அளவற்ற கருணை பல காலத்துக்கு முன்பே கிறிஸ்து இயேசுவின் மூலம் நமக்குக் கொடுக்கப்பட்டது. 10 இப்போதோ, நம்முடைய மீட்பரான கிறிஸ்து இயேசு தோன்றியதன் மூலம்+ அது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர் மரணத்தை ஒழித்து,+ வாழ்வையும்+ அழியாமையையும்+ பெறுவதற்கான வழியை நல்ல செய்தியின் மூலம்+ நமக்குத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்;

  • 1 பேதுரு 1:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அவர்கள் சேவை செய்துவந்தது தங்களுக்காக அல்ல, உங்களுக்காகத்தான் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் முன்கூட்டியே சொன்ன விஷயங்கள், பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்ட கடவுளுடைய சக்தியால் நல்ல செய்தியைப் பிரசங்கித்தவர்களின் மூலம் இப்போது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.+ அந்த விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதற்குத் தேவதூதர்களும் ஆவலோடு இருக்கிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்