உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 12:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அப்போது யெகோவா ஆபிராமிடம், “நீ உன் தேசத்தையும், உன் சொந்தக்காரர்களையும், உன் அப்பாவின் குடும்பத்தாரையும்* விட்டுவிட்டு நான் காட்டப்போகிற தேசத்துக்குப் புறப்பட்டுப் போ.+ 2 நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன், உன்னை ஆசீர்வதித்து உன் பெயரைப் பிரபலமாக்குவேன். உன் மூலமாக எல்லாருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும்.+ 3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நான் ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவர்களை நான் சபிப்பேன்.+ பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உன் மூலமாக நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்”+ என்று சொன்னார்.

  • ஆதியாகமம் 12:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 பின்பு யெகோவா ஆபிராமுக்குத் தோன்றி, “உன்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்”+ என்று சொன்னார். அதனால், ஆபிராம் யெகோவாவுக்காக அங்கே ஒரு பலிபீடம் கட்டினார்.

  • ஆதியாகமம் 13:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஆபிராமிடமிருந்து லோத்து பிரிந்துபோன பின்பு யெகோவா ஆபிராமிடம், “நீ இருக்கும் இடத்திலிருந்து தயவுசெய்து வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் பார். 15 நீ பார்க்கும் எல்லா இடங்களையும் உனக்கும் உன் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன்.+

  • ஆதியாகமம் 17:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 உன்னோடும், உன் சந்ததியோடும், அவர்களுக்குப் பின்வரும் எல்லா தலைமுறைகளோடும் நான் செய்திருக்கிற நிரந்தரமான ஒப்பந்தத்தைக் காப்பேன்.+ அதன்படியே, உனக்கும் உன்னுடைய வருங்காலச் சந்ததிக்கும் கடவுளாக இருப்பேன்.

  • ஆதியாகமம் 22:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன். உன்னுடைய சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணுவேன்.+ உன்னுடைய சந்ததி எதிரிகளுடைய நகரங்களை* கைப்பற்றும்.+ 18 நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின்+ மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’”+ என்று சொன்னார்.

  • ஆதியாகமம் 24:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 என்னுடைய அப்பாவின் வீட்டிலிருந்தும் என்னுடைய சொந்தக்காரர்களின் தேசத்திலிருந்தும் என்னைக் கூட்டிக்கொண்டு வந்த+ பரலோகத்தின் கடவுளான யெகோவா, என்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைத் தருவதாக+ வாக்குக் கொடுத்திருக்கிறார்.+ அதனால், அவருடைய தூதனை உனக்கு முன்னால் அனுப்புவார்,+ நீ கண்டிப்பாக அங்கிருந்து என் மகனுக்குப் பெண்ணெடுப்பாய்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்