உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 26:65
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 65 ஏனென்றால், “வனாந்தரத்தில் அவர்கள் நிச்சயம் சாவார்கள்” என்று யெகோவா சொல்லியிருந்தார்.+ அதனால், எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர அவர்களில் ஒருவர்கூட இவர்களோடு இல்லை.+

  • எண்ணாகமம் 32:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ‘எகிப்திலிருந்து வந்தவர்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்கள், ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் வாக்குக் கொடுத்த தேசத்தைப்+ பார்க்கப்போவதில்லை.+ ஏனென்றால், அவர்கள் முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படியவில்லை. 12 யெகோவாவாகிய எனக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிந்த+ கெனிசியனான எப்புன்னேயின் மகன் காலேபையும்+ நூனின் மகன் யோசுவாவையும்+ தவிர வேறு யாரும் அதைப் பார்க்கப்போவதில்லை’ என்று ஆணையிட்டுச் சொன்னார்.+

  • உபாகமம் 1:34-38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 இப்படி நீங்கள் முணுமுணுத்துக்கொண்டே இருந்ததை யெகோவா கேட்டார். அதனால், அவர் பயங்கர கோபத்தோடு, 35 ‘உங்கள் முன்னோர்களுக்குத் தருவதாக நான் வாக்குக் கொடுத்த நல்ல தேசத்தை இந்தக் கெட்ட தலைமுறையைச் சேர்ந்த ஒருவர்கூட பார்க்கப் போவதில்லை.+ 36 எப்புன்னேயின் மகன் காலேப் மட்டும்தான் அதைப் பார்ப்பான். யெகோவாவாகிய எனக்கு அவன் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால் அவனுடைய காலடி பட்ட இடத்தை அவனுக்கும் அவன் வம்சத்தாருக்கும் கொடுப்பேன்.+ 37 (உங்களால் யெகோவா என்மேலும் கோபப்பட்டு, “நீயும்கூட அங்கே போக மாட்டாய்.+ 38 உன் ஊழியனும் நூனின் மகனுமாகிய யோசுவாதான்+ அந்தத் தேசத்துக்குப் போவான்.+ அவனுக்குத் தைரியம் கொடு,*+ ஏனென்றால் இஸ்ரவேலர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள அவன்தான் உதவுவான்” என்றார்.)

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்