-
எண்ணாகமம் 27:12-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 பின்பு யெகோவா மோசேயிடம், “அபாரீம் மலைக்கு+ ஏறிப்போய், இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுக்கப்போகும் தேசத்தை அங்கிருந்து பார்.+ 13 அதை நீ பார்த்த பிறகு, உன் அண்ணன் ஆரோன் இறந்ததுபோல்+ நீயும் இறந்துபோவாய்.*+ 14 ஏனென்றால், சீன் வனாந்தரத்தில் ஜனங்கள் என்னிடம் வாக்குவாதம் செய்தபோது, அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்த விஷயத்தில் நீங்கள் இரண்டு பேரும் என்னை மகிமைப்படுத்தாமல், என் கட்டளையை மீறி நடந்தீர்கள்.+ அந்தத் தண்ணீர்தான் சீன் வனாந்தரத்தில்+ காதேசுக்குப்+ பக்கத்திலுள்ள மேரிபாவின் தண்ணீர்”+ என்றார்.
-
-
உபாகமம் 32:51, 52பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
51 ஏனென்றால், சீன் வனாந்தரத்திலுள்ள காதேசில் இருக்கிற மேரிபாவின் தண்ணீர் விஷயத்தில், நீங்கள் இரண்டு பேரும் இஸ்ரவேலர்களின் முன்னால் எனக்கு உண்மையாக நடக்கவில்லை,+ என்னை மகிமைப்படுத்தவில்லை.+ 52 இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் தருகிற தேசத்தை நீ தூரத்திலிருந்துதான் பார்ப்பாய், அதற்குள் நீ போக மாட்டாய்”+ என்று சொன்னார்.
-