-
உபாகமம் 7:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது. அவர்களுடைய மகன்களுக்கு உங்கள் மகள்களைக் கல்யாணம் செய்துவைக்கக் கூடாது. உங்களுடைய மகன்களுக்கு அவர்களுடைய மகள்களைக் கல்யாணம் செய்துவைக்கக் கூடாது.+ 4 ஏனென்றால், உங்கள் மகன்கள் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களை வணங்கும்படி அவர்கள் செய்துவிடுவார்கள்.+ அப்போது யெகோவாவின் கோபம் உங்கள்மேல் பற்றியெரியும். அவர் உங்களை ஒரு நொடியில் அழித்துவிடுவார்.+
-
-
1 ராஜாக்கள் 7:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அந்த மண்டபத்திலிருந்து சற்றுத் தள்ளி, இன்னொரு முற்றத்தில்,+ தான் குடியிருப்பதற்காக ஓர் அரண்மனையைக் கட்டினார். அந்த மண்டபத்தைப் போலவே அரண்மனையிலும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாலொமோன் தான் கல்யாணம் செய்திருந்த பார்வோனின் மகளுக்காக ஒரு மாளிகையைக் கட்டினார்.+ அது அந்த மண்டபத்தைப் போலவே இருந்தது.
-
-
நெகேமியா 13:25-27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 அதனால் நான் அவர்களைக் கடுமையாகத் திட்டினேன், சபித்தேன்; சிலரை அடித்து,+ அவர்களுடைய முடியைப் பிடுங்கினேன். அதோடு, மற்ற தேசத்தாருக்குப் பெண் கொடுக்கப்போவதில்லை என்றும், அவர்கள் நடுவிலிருந்து தங்களுக்கோ தங்களுடைய மகன்களுக்கோ பெண் எடுக்கப்போவதில்லை என்றும் கடவுள்மேல் சத்தியம் செய்து கொடுக்கும்படி சொன்னேன்.+ 26 பின்பு, “மற்ற தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்ததால்தானே இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் பாவம் செய்தார்? அவரைப் போல ஒரு ராஜா வேறு எங்குமே இருந்ததில்லை.+ அவரைக் கடவுள் நேசித்ததால்தான்+ இஸ்ரவேல் தேசம் முழுவதற்கும் ராஜாவாக்கினார். அப்படிப்பட்டவரையே மற்ற தேசத்துப் பெண்கள் பாவம் செய்ய வைத்துவிட்டார்கள்.+ 27 நீங்களும்கூட மற்ற தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டு நம்முடைய கடவுளுக்குத் துரோகம் செய்திருக்கிறீர்களே.+ நீங்கள் இவ்வளவு கேவலமாக நடந்திருப்பதை நம்பவே முடியவில்லை” என்றேன்.
-