உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 29:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 அவள் இன்னொரு தடவையும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “இந்தத் தடவை நான் யெகோவாவைப் புகழ்வேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா*+ என்று பெயர் வைத்தாள். அதன்பின், கொஞ்சக் காலம் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

  • ஆதியாகமம் 49:8-12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 யூதா!+ உன் சகோதரர்கள் உன்னைப் புகழ்வார்கள்.+ உன்னுடைய கை எதிரிகளின் கழுத்தைப் பிடிக்கும்.+ உன்னுடைய அப்பாவின் மகன்கள் உனக்கு முன்னால் தலைவணங்குவார்கள்.+ 9 யூதா ஒரு சிங்கக்குட்டி!+ என் மகனே, நீ இரையைத் தின்றுவிட்டு எழுந்துபோவாய். சிங்கத்தைப் போலக் கால்நீட்டிப் படுத்திருப்பாய். அவன் ஒரு சிங்கம், அவனை எழுப்ப யாருக்குத் துணிச்சல் இருக்கிறது? 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+ 11 யூதா தன்னுடைய கழுதையைத் திராட்சைக் கொடியிலும் கழுதைக்குட்டியைச் செழிப்பான திராட்சைக் கொடியிலும் கட்டிவைப்பான். தன்னுடைய உடையைத் திராட்சமதுவிலும், தன்னுடைய அங்கியைத் திராட்சரசத்திலும் துவைப்பான். 12 அவனுடைய கண்கள் திராட்சமதுவினால் சிவந்திருக்கின்றன. அவனுடைய பற்கள் பாலினால் வெண்மையாக இருக்கின்றன.

  • எபிரெயர் 7:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நம்முடைய எஜமான் அந்த யூதா கோத்திரத்திலிருந்து வந்தவர்+ என்ற விஷயம் தெளிவாக இருக்கிறது; அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் குருமார்களாக ஆவதைப் பற்றி மோசே சொல்லவே இல்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்