-
ஏசாயா 6:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 உசியா ராஜா இறந்துபோன+ வருஷம் அது. யெகோவா மிகவும் உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.+ அவருடைய நீளமான அங்கி ஆலயம் முழுவதும் பரவியிருந்தது. 2 சேராபீன்கள் அவரைச் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. இரண்டு சிறகுகளால் முகத்தையும் இரண்டு சிறகுகளால் பாதத்தையும் மூடியிருந்தார்கள். மற்ற இரண்டு சிறகுகளால் பறந்தார்கள்.
3 அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து,
“பரலோகப் படைகளின் யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்.+
பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று சத்தமாகச் சொன்னார்கள்.
-
-
எசேக்கியேல் 1:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகம் வெள்ளியும் தங்கமும் கலந்த உலோகத்தைப் போல, அதாவது நெருப்பு போல, பிரகாசித்தது.+ அதற்கு மேலாகவும் அப்படித்தான் பிரகாசித்தது. அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகத்துக்குக் கீழாக நெருப்பு போலத் தெரிந்தது.+ அவரைச் சுற்றிலும் ஒரே வெளிச்சமாக இருந்தது. 28 அவரைச் சுற்றியிருந்த பிரகாசமான வெளிச்சம், மழை பெய்யும் நாளில் மேகத்திலே தோன்றுகிற வானவில்லைப் போல இருந்தது.+ அது யெகோவாவின் மகிமையைப் போல இருந்தது.+ அதைப் பார்த்தவுடன் நான் சாஷ்டாங்கமாக விழுந்தேன். அப்போது, ஒருவர் பேசும் சத்தம் கேட்டது.
-