உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 31:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 யெகோவா மோசேயிடம், “நீ இறக்கப்போகிறாய். இந்த ஜனங்கள், நான் கொடுக்கப்போகிற தேசத்திலுள்ள தெய்வங்களை வணங்கி எனக்குத் துரோகம் செய்வார்கள்.+ என்னைவிட்டு விலகி,+ நான் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை மீறுவார்கள்.+ 17 அப்போது, அவர்கள்மேல் என் கோபம் பற்றியெரியும்.+ நான் அவர்களைக் கைவிட்டுவிடுவேன்.+ அவர்கள் அழிந்துபோகும்வரை என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வேன்.+ அவர்கள் பிரச்சினைகளிலும் கஷ்டங்களிலும் சிக்கித் தவிக்கும்போது,+ ‘நம் கடவுள் நம்மோடு இல்லாததால்தானே இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறோம்?’ என்று சொல்வார்கள்.+

  • உபாகமம் 32:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பின்பு அவர், ‘என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வேன்.+

      அவர்களுக்கு நடக்கப்போவதைப் பார்ப்பேன்.

      அவர்கள் நெறிகெட்ட தலைமுறை.+

      உண்மை இல்லாத வம்சம்.+

  • ஏசாயா 57:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆதாயத்துக்காக அவன் அநியாயமும் பாவமும் செய்ததைப் பார்த்துக் கொதித்துப்போனேன்.+

      அதனால் அவனைத் தாக்கினேன்; கோபத்தில் என் முகத்தை அவனிடமிருந்து மறைத்துக்கொண்டேன்.

      அவனோ மனம்* போன போக்கில் போய்+ எனக்குத் துரோகம் செய்துகொண்டே இருந்தான்.

  • எசேக்கியேல் 39:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 இஸ்ரவேல் ஜனங்கள் குற்றங்கள் செய்து எனக்கு உண்மையில்லாமல் நடந்துகொண்டதால்தான் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள் என்று மற்ற ஜனங்கள் தெரிந்துகொள்வார்கள்.+ இஸ்ரவேலர்கள் அப்படிச் செய்ததால்தான் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொண்டேன்.+ அவர்களை எதிரிகளின் கையில் பிடித்துக் கொடுத்து,+ எல்லாரையும் வாளுக்குப் பலியாக்கினேன்.

  • மீகா 3:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அந்த நாளில், நீங்கள் உதவிக்காக யெகோவாவைக் கூப்பிடுவீர்கள்.

      ஆனால், அவர் பதில் சொல்ல மாட்டார்.

      உங்களிடமிருந்து தன்னுடைய முகத்தை மறைத்துக்கொள்வார்.+

      ஏனென்றால், நீங்கள் அக்கிரமம் செய்கிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்