உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 16:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதோடு, யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த தங்கத்தையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய ராஜாவுக்கு லஞ்சமாக அனுப்பி வைத்தார்.+ 9 அவருடைய வேண்டுகோளை அசீரிய ராஜா ஏற்றுக்கொண்டான். அதனால், தமஸ்குவுக்குப் போய் அதைக் கைப்பற்றி அங்கிருந்த மக்களை கீர் தேசத்துக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்;+ ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.+

  • 2 ராஜாக்கள் 17:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+

  • ஏசாயா 7:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 சீரியாவின் தலைநகர் தமஸ்கு.

      தமஸ்குவின் தலைவன் ரேத்சீன்.

      இன்னும் 65 வருஷத்துக்குள்

      எப்பிராயீம் ஒரு தேசமாக இல்லாதபடி அடியோடு அழிந்துவிடும்.+

  • ஏசாயா 28:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 எப்பிராயீமின் குடிவெறியர்களுடைய பகட்டான கிரீடமே,*+

      செழிப்பான பள்ளத்தாக்குக்கு மேலே இருக்கிற குடிகாரர்களின் அலங்காரக் கிரீடமே,

      வாடிப்போகிற வெறும் மலர்க் கிரீடமே,

      உனக்கு ஐயோ கேடு!

       2 யெகோவா மகா சக்திபடைத்த ஒருவரை அனுப்புவார்.

      இடியுடன் பெய்யும் ஆலங்கட்டி* மழையைப் போலவும்,

      சேதம் உண்டாக்கும் சூறாவளியைப் போலவும்,

      வெள்ளப்பெருக்கை உண்டாக்கும் புயல்மழையைப் போலவும்,

      அவர் வந்து உன்னைக் கீழே தள்ளிப்போடுவார்.

  • ஓசியா 5:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இளம் சிங்கத்தைப் போல எப்பிராயீமின் மேல் நான் பாய்வேன்.

      பலமான சிங்கத்தைப் போல யூதா ஜனங்களின் மேல் பாய்வேன்.

      அவர்களைக் கடித்துக் குதறுவேன்.+

      அவர்களை இழுத்துக்கொண்டு போவேன்,

      யாராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்