உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 26:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 உங்கள் உணவுப் பொருள்களை அழித்துப்போடுவேன்.*+ அப்போது, 10 பெண்கள் ஒரே அடுப்பில் ரொட்டி சுடுவார்கள். அதையும் அளந்து அளந்துதான் கொடுப்பார்கள்.+ நீங்கள் சாப்பிட்டாலும் உங்கள் பசி தீராது.+

  • உபாகமம் 28:49
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 49 பூமியின் ஒரு எல்லையில் இருக்கிற தொலைதூர தேசத்தாரை உங்களுக்கு எதிராக யெகோவா அனுப்புவார்.+ அவர்கள் கழுகைப் போல் வேகமாகப் பாய்ந்து வருவார்கள்.+ அவர்களுடைய மொழி உங்களுக்குப் புரியாது.+

  • உபாகமம் 28:51
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 51 நீங்கள் அழியும்வரை உங்களுடைய ஆடுமாடுகளின் குட்டிகளையும் உங்கள் நிலத்தில் விளைகிறவற்றையும் அவர்கள் சாப்பிடுவார்கள். உங்களை ஒழித்துக்கட்டும்வரை தானியத்தையோ புதிய திராட்சமதுவையோ எண்ணெயையோ கன்றுகளையோ ஆட்டுக்குட்டிகளையோ உங்களுக்காக விட்டுவைக்க மாட்டார்கள்.+

  • எரேமியா 37:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அதனால், எரேமியாவை ‘காவலர் முற்றத்தில்’+ அடைத்து வைக்கும்படி சிதேக்கியா ராஜா கட்டளை கொடுத்தார். நகரத்தில் ரொட்டி கிடைக்கும்வரை+ ரொட்டி சுடுகிறவர்களின் தெருவிலிருந்து+ தினமும் எரேமியாவுக்கு ஒரு வட்டமான ரொட்டி கொடுக்கப்பட்டது. அவர் ‘காவலர் முற்றத்திலேயே’ வைக்கப்பட்டிருந்தார்.

  • எசேக்கியேல் 4:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பின்பு, “மனிதகுமாரனே, எருசலேமில் நான் பஞ்சத்தைக் கொண்டுவரப்போகிறேன்.*+ ஜனங்கள் பயங்கர கவலையோடு உணவை அளந்து அளந்து சாப்பிடுவார்கள்.+ திகிலோடு தண்ணீரை அளந்து அளந்து குடிப்பார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்