உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 5:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 தீர்க்கதரிசிகள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+

      குருமார்கள் தங்களுடைய அதிகாரத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள்.

      என் ஜனங்களுக்கு இதுதான் பிடித்திருக்கிறது.+

      ஆனால், முடிவு வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?”

  • எரேமியா 6:12-15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அவர்களுடைய வீடுகளையும் தோட்டங்களையும் மனைவிகளையும்

      எதிரிகள் அபகரித்துக்கொள்வார்கள்.+

      தேசத்திலுள்ள எல்லா ஜனங்களையும் நான் தண்டிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.

      13 “சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+

      தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+

      14 சமாதானமே இல்லாதபோது,

      ‘சமாதானம் இருக்கிறது! சமாதானம் இருக்கிறது!’+ என்று சொல்லி,

      என் ஜனங்களுடைய காயங்களை* மேலோட்டமாகக் குணப்படுத்தப் பார்க்கிறார்கள்.

      15 அவர்கள் செய்த அருவருப்பான காரியங்களை நினைத்துக் கொஞ்சமாவது வெட்கப்படுகிறார்களா?

      இல்லவே இல்லை!

      வெட்கம் என்றால் என்னவென்றுகூட அவர்களுக்குத் தெரியாது!+

      அதனால், விழுந்துவிட்டவர்களோடு அவர்களும் விழுவார்கள்.

      நான் தண்டிக்கும்போது அவர்கள் தடுக்கி விழுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.

  • எரேமியா 27:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ‘அதனால், தீர்க்கதரிசிகளும் குறிசொல்கிறவர்களும் கனவு காண்கிறவர்களும் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் உங்களிடம், “நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்ய மாட்டீர்கள்” என்று சொல்வதை நம்பாதீர்கள்.

  • புலம்பல் 2:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உன்னுடைய தீர்க்கதரிசிகள் பார்த்த தரிசனங்கள் பொய்யானவை, அர்த்தமற்றவை.+

      அவர்கள் உன்னுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டவில்லை; நீ சிறைபிடிக்கப்பட்டுப் போவதைத் தடுக்கவில்லை.+

      பொய்த் தரிசனங்களைச் சொல்லிச் சொல்லியே உன்னை ஏமாற்றினார்கள்.+

  • எசேக்கியேல் 22:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 உன்னுடைய தீர்க்கதரிசிகள் தங்களுடைய அக்கிரமங்களைப் பூசிமெழுகுகிறார்கள். போலித் தரிசனங்களைப் பார்க்கிறார்கள், பொய்யாகக் குறிசொல்கிறார்கள்.+ யெகோவாவாகிய நான் எதையும் சொல்லாதபோது, “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்” என்று சொல்கிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்