-
யாத்திராகமம் 34:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 யெகோவா மோசேயின் முன்னால் கடந்துபோகும்போது, “யெகோவா, யெகோவா, இரக்கமும்+ கரிசனையும்*+ உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ உண்மையுள்ளவர்,*+ 7 ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கு மாறாத அன்பைக் காட்டுபவர்,+ குற்றத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிப்பவர்.+ ஆனால், குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விடமாட்டார்.+ தகப்பன்கள் செய்த குற்றத்துக்காக அவர்களுடைய மகன்களையும் பேரன்களையும் மூன்றாம் நான்காம் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களையும் தண்டிப்பார்”+ என்று சொன்னார்.
-
-
எரேமியா 46:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 என் ஊழியனான யாக்கோபே, நீ பயப்படாதே.
இஸ்ரவேலே, திகிலடையாதே.+
தூர தேசத்திலிருந்து உன்னை விடுதலை செய்வேன்.
அடிமைப்பட்டிருக்கிற தேசத்திலிருந்து உன் சந்ததியைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+
யாக்கோபு திரும்பி வந்து தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ்வான்.
அவனைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.’+
28 யெகோவா சொல்வது இதுதான்: ‘என் ஊழியனான யாக்கோபே, பயப்படாதே.
நான் உன்னோடு இருக்கிறேன்.
உன்னை எந்தத் தேசங்களுக்கெல்லாம் சிதறிப்போக வைத்தேனோ
அந்தத் தேசங்களையெல்லாம் அழித்துவிடுவேன்.+
ஆனால், உன்னை அழிக்க மாட்டேன்.+
அதேசமயம், உன்னைத் தண்டிக்காமலும் விட மாட்டேன்.
-